தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Published on: May 28, 2021
---Advertisement---

739e491408de12d22b7056fae44fb6aa

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களாகவே கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் தினசரி பாதிப்பு 3 ஆயிரத்தில் துவங்கி வேகமாக அதிகரித்து 30 ஆயிரத்தை தாண்டியது. அதுவும் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் 35 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். இறப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது.

எனவே, அதை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 24ம் தேதி முதல் ஒரு வாரம் முழு ஊரடங்கை அறிவித்தது. எனவே, அனைத்து கடைகளும் மூடப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்று குறைய துவங்கியது. 

இந்நிலையில், தமிழகத்தில் ஜூன் 7ம் தேதி முதல் ஊரடங்கை நீட்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது அறிவித்துள்ளார். எனவே, தற்போதுள்ள நிலை ஜூன் 7ம் தேதி வரை நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Comment