’தலைவர் 168’ படத்தின் ஸ்டில் லீக்: அதிர்ச்சியில் படக்குழுவினர்

Published On: December 25, 2019
---Advertisement---

4383374ce5efaa2a02db6f196d725f91-1

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’தலைவர் 168’ படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த், குஷ்பூ, மீனா உள்பட படக்குழுவினர் பலர் கலந்து கொண்டுள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் கீர்த்தி சுரேஷ் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வார்கள் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர் 

இந்த நிலையில் இந்த படத்தில் நடித்துக் கொண்டிருந்த மீனாவின் ஸ்டில் இணையத்தில் கசிந்துள்ளது. இது படக்குழுவினர் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தும், செல்போன்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தும், இந்த ஸ்டைல் எப்படி லீக் ஆனது என்பது குறித்து படக்குழு என விசாரணை செய்து வருகின்றது

மேலும் இந்த புகைப்படத்தில் மீனா கிராமத்து கெட்டப்பில் இருப்பதால் அவர் ஒரு கிராமத்து பெண் கேரக்டரில் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படம் கிராமத்து சப்ஜெக்ட் என்றும் கிராமத்து பெரியவராக ரஜினிகாந்த் நடிப்பதாகவும் அவருக்கு ஜோடியாக கிராமத்து பெண்ணாக மீனா நடிப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது

சிறுத்தை சிவா இயக்கத்தில் டி இமான் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகிவரும் இந்த படத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ், சூரி, உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

Leave a Comment