பட்டமளிப்பு விழாவில் மாணவி செய்த காரியம் – மேற்கு வங்கத்தில் நூதன எதிர்ப்பு !

aabaf6706ff4729e184c7f0aebd0529b

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மாணவி குடியுரிமை சட்ட நகலை கிடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடெங்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் பல வடிவங்களில் நடைபெற்று வருகின்றன. அதிலும் வட கிழக்கு மாநிலங்களில் மற்றும் மேற்கு வங்கத்தில் போராட்டம் உச்சத்தில் உள்ளது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் பட்டத்தைப் பெற வந்த மாணவி மேடையில் குடியுரிமை திருத்த சட்டத்தின் நகலைக் கிழித்து எறிந்தார் பரபரப்பு ஏற்பட்டது. தனக்கான பட்டத்தைப் பெற வந்த மாணவி பேட்ஸ்மிதா சவுத்ரி மேடையில்தான் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பதாகவும், அரசிடம் எந்த ஒரு ஆவணத்தையும் தர முடியாது’ எனவும் மேடையில் அறிவித்தார். மேலும் தன் வசமிருந்த குடியுரிமை திருத்த சட்ட நகலை மேடையிலேயே கிழித்தார். அதன் பிறகுதான் அதை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றார்.

முன்னதாக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த ஆளுநரை உள்ளே விடாமல் மாணவர்கள் இரண்டு மணி நேரம் கருப்புக்கொடி காட்டி போராடினார். அதனால் ஆளுநர் நினைவு விழாவில் கலந்து கொள்ளாமலேயே திரும்பிச் சென்றார்.

Related Articles
Next Story
Share it