More

காதல் பரத் நடிப்பில் அசத்தல் படங்கள்

பரத் இந்திய திரைப்பட் நடிகர். இவர் 2003-ம் ஆண்டு வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்பு காதல், செல்லமே, வெயில் திரைப்படங்கள் மூலம் பிரபலமானார். இவர் இதுவரை தமிழில் எண்ணற்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

பாய்ஸ், பிப்ரவரி 14, காதல், செல்லமே, எம்டன்-மகன், சென்னை காதல், அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, வெயில், பட்டியல், கூடல்நகர், பழனி, ஆறுமுகம், திருத்தணி, ஜாக்பாட் (இந்தி) 4 தி பீப்பிள், கூத்தா (மலையாளம்)முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, நேபாளி, சேவல், வானம், கண்டேன் காதலை, யுவன் யுவதி, கோ, அரவான், கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், 555, ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி, கில்லாடி, இஞ்சி இடுப்பழகி, கடுகு, என்னோடு விளையாடு, தம்பிக்கு இந்த ஊரு, கண்டேன் காதலை, கடைசி பெஞ்ச் கார்த்தி, ஸ்பைடர், பொட்டு, காளிதாஸ், சிம்பா, முன்னறிவான், 8 ஆகிய படங்களில் நடித்துள்ளார். 

இவற்றில் முன்னறிவான், 8 படங்களில் தற்போது நடித்து வருகிறார். 

பரத் 21.07.1983ல் திருச்சியில் சீனிவாசன் – லட்சுமி தம்பதியினருக்கு பிறந்தார். இவர் நடிகர் மற்றும் டான்ஸர் ஆக பணிபுரிந்து வருகிறார்.  இவரது வாழ்க்கைத் துணைவியின் பெயர் ஜெஷ்லி. ஆதியன், ஜெடன் என இரு பிள்ளைகள் உள்ளனர். பிரீத்தி என ஒரு சகோதரி உள்ளார்.

பாய்ஸ் 

2003ல் வெளியான இப்படத்தை ஷங்கர் இயக்கினார். சித்தார்த், ஜெனிலியா, பரத், விவேக், செந்தில், நகுல், மணிகண்டன் உள்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்ஸ். அலெ, அலெ, பூம் பூம், மாறோ மாறோ, டேட்டிங் பிலாஸ், கேர்ள் பிரண்ட், பிளீஸ் சேர், சரேகமா ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. பாடல்கள் அத்தனையும் இளம் ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இசைப்புயல் மெட்டு போட்டு இருப்பார். 

இப்படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக 62 கேமராக்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இப்படத்தில் பரத் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். 

செல்லமே 

2004ல் வெளியான இப்படத்தை காந்தி கிருஷ்ணா இயக்கினார். விஷால், ரீமாசென், பரத், மும்தாஜ், பானுப்பிரியா, விவேக் உள்பட பலர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஆரிய உதடுகள், செல்லக்கிளியே, காதலிக்கும், கும்மியடி, வெள்ளைக்கார முத்தம் ஆகிய பாடல்கள் சூப்பர். 

காதல் 

2004ல் பாலாஜி சக்தி வேல் இயக்கத்தில் வெளிவந்தது காதல் படம். இப்படத்தில் பரத், சந்தியா, சுகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். குறைந்த செலவில் எடுக்கப்பட்டு அதிக வசூலை ஈட்டிய படம். இயக்குனர் ஷங்கர் தயாரித்த படம். இசை ஜோஷ்வா ஸ்ரீதர். பாடல்கள் அத்தனையும் பட்டையைக் கிளப்பின. பூவும், புடிக்குது, இவன் தான், தண்டாத்தி கருப்பாயி, தொட்டுத் தொட்டு, புறா கூண்டு, கிறு கிறு, உனக்கென இருப்பேன், காதல் ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. இப்படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. 

நேபாளி 

இயக்குனர் வி.துரையின் இயக்கத்தில் 2008ல் வெளியான படம். பரத் 3 வேடங்களில் நடித்து கலக்கியிருப்பார். மீரா ஜாஸ்மின், கோவிந்த், சங்கீதா, பிரேம் மற்றும் பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகங்கள். இப்படத்தின் வசனத்தை பிரபல நாவல் ஆசிரியர் பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதினார். பிரியா இது சிட்அவுட், முழுநீள காதல், ஹே யு வாவ், கனவிலே கனவிலே, சுத்துதே சுத்துதே ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றள்ளன. படத்தில் பரத் அசல் நேபாளி போல் இமையை தூக்கி வைத்து நடித்து இருப்பார். சரியான திரைக்கதை இல்லாததால் படம் பாக்ஸ் ஆபீசில் தோல்வியைத் தழுவியது.  

555

சசி இயக்கத்தில் 2013ல் வெளியான இப்படத்தில் பரத், மிர்திகா, எரிக்கா, பெர்னான்டஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். சைமன் இசையில் விழியிலே விழியிலே, முதல் மழை காலம், ரௌடி கேர்ள்ஸ், காதல் இந்த காதல், எழவு, கானி காமா, சரேகமா பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. படம் எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் ஒரு தடவை பார்க்கலாம் என்ற அளவில் உள்ளது. இப்படத்திற்காக பரத் 6 பேக் உடற்கட்டுடன் நடித்திருப்பார். ஆக்ஷன், லவ் சென்டிமென்ட் கொண்ட படம் இது. 

இன்று பிறந்தநாள் காணும் பரத்துக்கு நம்ம டீம் சார்பாக வாழ்த்துக்கள்.
  

Published by
adminram

Recent Posts