More

ஊர் பெயரில் உலா வந்த வெற்றிப்படங்கள்!

தமிழ்சினிமாவின் தலைப்புகளைக் கொஞ்சம் உற்று நோக்கினால் சுவாரசியமாக இருக்கும். ஏதேனும் ஒரு ஒற்றுமையுடன் படங்கள் வரிசை கட்டி வரும். உதாரணமாக நம்பர்களில் படங்களைப் பற்றி நாம் ஏற்கனவே பார்த்தோம். அதே போல பூக்களின் பெயர்களைத் தாங்கி வந்த படங்களையும் பற்றி பார்த்துள்ளோம்.

தற்போது ஊர் பெயரில் உள்ள படங்களைப் பற்றி கொஞ்சம் அலசலாம். இயக்குனர் பேரரசுவின் படங்கள் ஊர் பெயரையேத் தாங்கி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் விறுவிறுப்பான ஆக்ஷன் படங்களாகவே இருக்கும். 

மதுரை வீரன் 

1956ல் வெளியான இப்படத்தை யோகானந்த் இயக்கினார். எம்.ஜி.ஆர், பத்மினி, பானுமதி, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் எம்ஜிஆரின் மாறுகால் மாறுகை வாங்கும் காட்சி இடம்பெற்றது. இதை ரசிகர்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செந்தமிழா, நாடகமெல்லாம், அவருக்கும் எனக்கும், கடமையிலே, ஆடல் காணீரோ, சும்மா கிடந்த, குன்றத்தூர் ஆடி வரும், வாங்க மச்சான் வாங்க, ஏச்சு பிழைக்கும் ஆகிய பாடல்கள் இடம்பெற்றன. 
மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி 

Advertising
Advertising

1966ல் வெளியான காமெடி படம். திருமலை மகாலிங்கம் இயக்கத்தில் வெளியானது. ரவிச்சந்திரன், கல்பனா, நாகேஷ், மனோரமா உள்பட பலர் நடித்துள்ளனர். சாலையில் ஓடும் பேருந்தில் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் இதுதான். டி.கே.ராமமூர்த்தி இசை அமைத்தார். என்ன எந்தன், எங்கே பயணம், மலர் போன்ற பருவமே, ஹலோ மை ப்ரண்ட் நெஞ்சத்தில் என்ன ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

பழனி 

சிவாஜி நடித்த படம். 1965ல் வெளியானது. பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி, தேவிகா, எஸ்.எஸ்.ராஜேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை அமைத்துள்ளார். அண்ணன் என்னடா, ஆறோடும் மண்ணில், வட்ட வட்ட பாறையிலே, இதயம் இருக்கின்றதே, பலமான, உள்ளத்துக்குள்ளே ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

இதே பெயரில் பின்னாளில் பேரரசு இயக்கத்தில் வெளியான படத்தின் பெயரும் பழனி தான். 2008ல் வந்த இப்படத்தை சக்தி சிதம்பரம் தயாரித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்தார். பரத், காஜல் அகர்வால், குஷ்பூ, மனோஜ் கே.ஜெயன், கஞ்சா கருப்பு, பி.வாசு உள்பட பலர் நடித்துள்ளனர். எல்லாம் வல்ல இறைவா, யாரும் என்னிடம், திருவாரூர் தேரே, இன்னொரு முறை, தாயை போலத்தான், லொக்கு லொக்கு ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. 

சீவலப்பேரி பாண்டி 

1994ல் வெளியான படம். நெப்போலியன் நடித்த இப்படத்தை பிரதாப் போத்தன் இயக்கினார். படம் செம ஹிட் அடித்தது. திருநெல்வேலி சீமையிலே என்னும் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின. நெப்போலியன், சரண்யா, அஹானா, ஆர்.பி.விஸ்வம், சில்க் ஸ்மிதா, சார்லி உள்பட பலர் நடித்துள்ளனர். ஆதித்யன் இசை அமைப்பில் பாடல்கள் அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின. ஒயிலா பாடும் பாட்டுல, திருநெல்வேலி சீமையில, கிழக்கு செவக்கையிலே, மசாலா அறைக்குற, அருவி ஒண்ணு ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

திருநெல்வேலி 

2000ல் பிரபு நடித்து வெளியான படம்;. இப்படத்தின் இயக்குனர் பாரதி கண்ணன். பிரபு, ரோஜா, அலெக்ஸ், சந்திரசேகர், ஜீவன், கரண், நெல்லை சிவா, பொன்னம்பலம், விந்தியா, விவேக், வினுசக்கரவர்த்தி உள்பட பலர் நடித்துள்ளனர். இனி நாளும் திருநாள், ஓல குடிசையிலே, கட்டழகி, பொட்டழகி, உன் உதட்டோர சிவப்பே, திருநெல்வேலி, எழ அழகம்மா, எந்த பாவி கண்ணுப்பட்டு, சாதி எனும் கொடுமை ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் உன் உதட்டோர சிவப்பே பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ரகம். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இதுதான். தேவாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் தேன் போன்றவை. 

திருமலை

தளபதி விஜய் நடித்த படம். 2003ல் பேரரசு இயக்கத்தில் வெளியான அதிரடி திரைப்படம். விஜயின் ஆக்ஷன் வரிசைப்படங்களில் முத்திரை பதித்த படம். விஜயுடன் ஜோதிகா, விவேக், ரகுவரன், கௌசல்யா, கருணாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தில் கிரண் சிறப்புத் தோற்றத்தில் நடித்து ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி விட்டுச் செல்வார். வித்யாசாகரின் இசையில் பாடல்கள் சரவெடி ரகம். தாம் தக்க, தீம் தக்க, வாடியம்மா ஜக்கம்மா, நீயா பேசியது, அழகூரில், திம்சுக்கட்டை ஆகிய பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. 

திருப்பாச்சி 

2005ல் வெளியான இப்படத்தை பேரரசு இயக்கினார். விஜய், த்ரிஷா, சாயாசிங், எம்.என்.ராஜம் உள்பட பலர் நடித்துள்ளனர். தீனா, தேவி ஸ்ரீபிரசாத், மணிசர்மா ஆகியோர் இசை அமைத்தனர். நீ எந்த ஊரு, கும்பிட போன தெய்வம், கண்ணும் கண்ணுதான், என்ன தவம், அவிச்சு வச்ச, அப்பன் பண்ணா ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

சிவகாசி

2005ல் வெளியான இப்பத்தை பேரரசு இயக்கினார். ஏ.எம்.ரத்னம் தயாரிக்க, ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். விஜய், அசின், பிரகாஷ்ராஜ், கீதா, நயன்தாரா (சிறப்புத் தோற்றம்), வையாபுரி, சிட்டி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். அண்ணன் தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். 

இது என்ன, கோடம்பாக்கம் ஏரியா, வாடா, வாடா, அட என்னத்த, தீபாவளி, என் தெய்வத்துக்கே ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இது பட்டாசு போல படபடவென வெடிக்கும் அதிரடி திரைப்படம். ரசிகர்கள் மத்தியில் விஜயின் ஆக்ஷன் வெகுவாக பாராட்டப்பட்டது. 

திருப்பதி 

அல்டிமேட் ஸ்டார் அஜீத் நடிப்பில் வெளியான படம். 2006ல் வெளியானது. பேரரசுவின் இயக்கத்தில் வந்த அதிரடி திரைப்படம். அஜீத்குமாருடன் சதா, பிரமிட் நடராஜன், கஞ்சா கருப்பு, ரியாஸ்கான், அருண்பாண்டியன், சத்யன், லைலா உள்பட பலர் நடித்துள்ளனர். பரத்வாஜ் இசையில் பாடல்கள் அனைத்தும் பட்டையைக் கிளப்பின. ஆத்தாடி ஆத்தாடி, திருப்பதி வந்தா, கீரை விதைப்போம், எனையே எனக்கு, செல்லவும் முடியல, புதுவீடு கட்டலாமா ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் கீரை விதைப்போம் பாடலை பிரபல நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தூத்துக்குடி 

2006ல் இப்படம் வெளியானது. ஹரிக்குமார் நடித்த இப்படத்தை சஞ்சய் ராம் இயக்கினார். பிரவீண் மணி இசை அமைத்தார். ஹரிக்குமார், கார்த்திகா, சுவேதா உள்பட பலர் நடித்துள்ளனர். சொல்லாமல், ஏத்திப்போடு, கா விடுவோம், கருவாப்பையா, கொழுக்கட்டை, புலம் புலம் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் கருவாப்பையா பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின. 

தர்மபுரி

2006ல் பேரரசு இயக்கத்தில் வெளியான இப்படம் செம அதிரடி படம். வித்யாசாகர் இசையில் விஜயகாந்த், லட்சுமி ராய், ஸ்ரீ சூர்யா மூவீஸ் தயாரித்த படம். நான் யாரு, வந்தா வாடி, எங்கம்மா குத்தம்மா, வந்துட்டாரு, கருத்தமச்சான் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

திருவண்ணாமலை 

ஆக்ஷன் கிங் அர்ஜூன் நடித்த படம். 2008ல் வெளியான இப்படத்தில் அர்ஜூனுடன் பூஜாகாந்தி, கருணாஸ், சாய்குமார், விதார்த், வையாபுரி, சிட்டிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். இது ஒரு ஆக்ஷன் படம். ஓம் சிவ சிவ, நம்ம நடை, அடியே, காடை, சொல்ல சொல்ல, எம்மையாலும் ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

திருத்தணி 

2012ல் வெளியான அதிரடி திரைப்படம். பரத் நடிப்பில் பேரரசு இயக்கத்தில் வெளியானது. பரத்துடன் சுனைனா, ராஜ்கிரண், பாண்டியராஜன், ஆஷிஷ் வித்யார்த்தி; உள்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் இசை அமைப்பாளர் பேரரசு. நீ எனக்கு நீ எனக்கு, வாண வேடிக்கை வெடிடா, அடி வானவில்லே, யம்மா யம்மா, வண்ணாரப்பேட்டை, ராஜா ராஜா ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் யம்மா யம்மா பாடலை டி.ராஜேந்தர் அனுராதா ஸ்ரீராமுடன் இணைந்து பாடியுள்ளார். 

Published by
adminram

Recent Posts