13 மாவட்டங்களில் வெயில் அதிகரிக்கும் – வானிலை மையம் எச்சரிக்கை

Published on: May 28, 2021
---Advertisement---

46bce3d472c8963d9764160439566d84

தற்போதெல்லாம் கோடை காலம் மார்ச் மாதமே துவங்கி விடுகிறது. அதன்பின் வெயில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து தற்போது மிகவும் அதிகமான வெயில் வாட்டி வருகிறது. ஆனால், தமிழகமெங்கும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால் வீட்டிலே இருந்து வெயிலில் இருந்து பலரும் தப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்னும் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை தெரிவித்துள்ளது. திருச்சி, மதுரை, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Leave a Comment