உருவாகிறது வடிவேல் படத்தின் இரண்டாம் பாகம்!.. யாரெல்லாம் நடிக்கிறாங்க தெரியுமா?...

Vadivelu: தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வடிவேலு. 15 வருடங்களுக்கு முன் கோலிவுட்டில் கொடிகட்டி பறந்தவர். கவுண்டமணி ரிட்டயர் ஆகிவிட, சந்தானம் ஹீரோவாக நடிக்கப்போய்விட வடிவேலுவைவை நம்பியே பல படங்கள் உருவானது. விவேக் மட்டும் தொடர்ந்து நடித்து வந்தார்.
வடிவேலுவுக்கு எந்த அளவுக்கு நகைச்சுவை உணர்வு இருக்கிறதோ அதைவிட அதிகமான திமிறும், தெனாவட்டும் இருக்கிறது என சொல்வார்கள். யாரையும் மதிக்கமாட்டார். யாருக்கும் எந்த உதவியும் செய்யமாட்டார். யாரைவும் வளர்த்துவிட மாட்டார். அவரோடு நடிக்கும் சின்ன சின்ன நடிகர்களையும் அடிமைப்போல நடத்துவார். அவர்களுக்கு கொடுக்கும் சம்பளத்தையும் குறைத்துவிடுவார்.
இப்படி பல கெட்ட குணங்கள் வடிவேலுவுக்கு உண்டு. இதை அவருடன் பல படங்களில் நடித்த காமெடி நடிகர்கள் பல ஊடகங்களில் சொல்லி இருக்கிறார்கள். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கால்ஷீட் என்றால் 12 மணிக்கு சென்று 5 மணிக்கெல்லாம் வீட்டுக்கு போய்விடுவார். இத்தனைக்கும் தினமும் 10 லட்சம் சம்பளம் வாங்கினார்.
ஆனால், அவரின் காமெடிகள் ரசிகர்களை சிரிக்க வைத்தது. இப்பவும் அவரின் மீம்ஸ்கள்தான் சமூகவலைத்தளங்களில் வலம் வருகிறது. 4 வருடங்கள் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார். அதற்கு காரணம் இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் பிரச்சனை செய்து அந்த படம் டிராப் ஆகி அப்படத்தை தயாரித்த இயக்குனர் ஷங்கருக்கு சில கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் அவர் கொடுத்த புகாரில் வடிவேலுவுக்கு ரெட் கார்டு விதிக்கப்பட்டது.
அதன்பின் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்கிற படம் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார் வடிவேலு. ஆனால், அந்த படம் ஓடவில்லை. மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்த மாமன்னன் படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. இப்போது சுந்தர்.சி இயக்கி நடிக்கும் கேங்கர்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பழைய வடிவேலுவை பார்க்கலாம் என சொல்கிறார்கள்.
இந்நிலையில், மறைந்த நடிகர் முரளி மற்றும் வடிவேலு இணைந்து நடித்து 2002ம் வருடம் வெளியாகி ரசிகர்களை சிரிக்க வைத்த சுந்தரா டிராவல் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. ஆனால், இதில் வடிவேலு நடிக்கவில்லை. கருணாஸ் மற்றும் கருணாகரன் இணைந்து நடித்து வரும் இந்த படத்திற்கு சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் ஃபாஸ்ட் என தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை கருப்பு தங்கம் என்பவர் இயக்கி வருகிறார்.