டிராகன் படத்தில் பிரதீப் நடிக்கலைனா இவர்தான் நடிச்சிருப்பாரு.. ஆனா படம் ஓடியிருக்குமா?

மதகஜராஜா பட வெற்றிக்கு பிறகு இந்த ஆண்டு மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது டிராகன் திரைப்படம். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு அடுத்தடுத்து வெற்றி கிடைத்துள்ள நிலையில் இந்தப் படமும் மேலும் வெற்றியை குவித்துள்ளது .
ஏற்கனவே ஏஜிஎஸ் நிறுவனம் பிரதீப் ரங்க நாதனை வைத்து லவ் டுடே என்ற ஒரு பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டை கொடுத்திருந்த நிலையில் மீண்டும் அதே பிரதீப் ரங்கநாதன் மற்றும் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியை பெரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஒரு அழகான மெசேஜை காமெடியுடன் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்களை கவர்ந்து வருகிறது.
பெரிய பெரிய முன்னணி நடிகர்களை வைத்து படம் எடுத்து பெரிய நஷ்டத்தை சந்திக்கும் தயாரிப்பாளர்கள் மத்தியில் சமீப காலமாக சின்ன சின்ன படங்கள் புதுமுக நடிகர்கள் என இதை மட்டுமே நம்பி படத்தை எடுத்து தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகிறார்கள் ஏஜிஎஸ் நிறுவனம். அந்த வகையில் டிராகன் திரைப்படமும் அவர்களின் நம்பிக்கையை வீணாக்கவில்லை .படத்தை பார்த்த அனைவருமே மிகுந்த மன நிறைவுடன் வெளியே வருவதை பார்க்க முடிகிறது.
ஆக்சன் மாஸ் இது மட்டும் படம் இல்லை. சிறு பட்ஜெட்டில் சாதாரண கதையில் நகைச்சுவையாக கொடுத்தாலே நாங்கள் ரசிப்போம் என்பதை இந்த படத்தின் மூலம் மக்கள் நிரூபித்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு வசூலும் இந்த படம் அள்ளி இருக்கிறது. படம் வெளியாகி முதல் நாளில் எட்டு கோடி வரை இந்திய அளவில் வசூலித்திருப்பதாக தெரிகிறது. இனி வார விடுமுறை நாள் என்பதால் இன்னும் இதனுடைய வசூல் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த மாதம் கடைசி வரை எந்த ஒரு பெரிய நடிகரின் படமும் வெளியாகாத நிலையில் டிராகன் திரைப்படம் கண்டிப்பாக 50 கோடி வரை வசூலை அள்ளும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் டிராகன் திரைப்படத்தில் ஒரு வேளை பிரதீப் நடிக்கவில்லை என்றால் வேறு யார் நடித்திருப்பார் என்ற கேள்விக்கு அஸ்வத் மாரிமுத்து பதில் கூறுகிறார், டிராகன் திரைப்படத்தின் கதை முழுக்க முழுக்க பிரதீப்புக்காக எழுதிய கதை.
ஒருவேளை அவர் நடிக்கவில்லை என்றால் அதில் நான் தான் நடித்திருப்பேன். ஏனெனில் அவரை இந்த படத்தில் பார்க்கிறீர்கள் என்றால் அது முழுக்க முழுக்க நானாகத்தான் இருப்பேன் என கூறி இருக்கிறார். இதற்கு அடுத்தபடியாக சிம்புவை வைத்து படத்தை இயக்கப் போகிறார் அஷ்வத் மாரிமுத்து. இனிமேல் சிம்பு தரப்பிலும் என்னுடைய தரப்பில் எந்த ஒரு கால தாமதமும் ஏற்படாது. இன்னும் இரண்டு வருடங்களில் சிம்புவின் நடிப்பில் தொடர்ந்து நான்கு படங்கள் கண்டிப்பாக வெளியாகும் .அந்த அளவுக்கு அவரும் அவருடைய லைனை தயாராக வைத்திருக்கிறார் என அஸ்வத் மாரிமுத்து கூறியிருக்கிறார்.