More

இந்திய சினிமாவில் இதுவரை சொல்லப்படாத கதை… புது ரூட் பிடித்த கோலிவுட்

கோலிவுட்டில் உண்மை சம்பவங்களை கொண்டு எடுக்கும் படங்கள் நல்ல வரவேற்பையே பெற்று வருகின்றன. அந்த வகையில், இந்திய சினிமாவின் இதுவரை சொல்லப்படாத கதை படமாக்கப்பட்டு வருகிறது. 1997ல் போலீஸ் வேலைக்கு செல்ல நடக்கும் பயிற்சியில், ஒரு இளைஞர் சந்தித்த சம்பவங்களே இப்படத்தின் கதையாக உருவாகி இருக்கிறது. இந்த கதை இதுவரை எந்த இந்திய சினிமாவும் சொல்லப்படவில்லை. கோலிவுட்டிற்கே இது புதிதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

வெற்றிமாறனின் உதவி இயக்குனரான தமிழ் இப்படத்தினை இயக்கி வருகிறார். டாணாக்காரன் என பெயரிடப்பட்டு இருக்கும் இப்படத்தில் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அஞ்சலி நாயகர் இணைந்து இருக்கிறார்.  பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து இருக்கிறது. எம்.எஸ்.பாஸ்கர் இப்படத்தில் முக்கிய வேடம் ஏற்று இருக்கிறார்கள். மே மாதம் திரைக்கு வர இருக்கும் இப்படத்தின் மொத்த படப்பிடிப்புகளும் 51 நாட்களில் முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

Published by
adminram

Recent Posts