More

மாஸ் இயக்குனருடன் கைகோர்க்கும் தமாஸ் நடிகர் – கலக்கல் காம்பினேஷனா இருக்கே!

ரஜினியை வைத்து பாட்ஷா என்ற இமாலய ஹிட்டைக் கொடுத்த இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் மிர்ச்சி சிவா ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.

Advertising
Advertising

ரஜினியின் சூப்பர் ஸ்டார் பிம்பத்தைப் பல மடங்கு உயர்த்திய படம் என்று சொன்னால் அது பாட்ஷா. அந்த அளவுக்கு 25 ஆண்டு கழித்தும் அந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான படமாக பேசப்பட்டு வருகிறது. அந்த படம் உள்பட மொத்தம் ரஜினியை வைத்து 5 படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. ஒரு கட்டத்தில் அவரது படங்கள் தோல்வி அடைந்ததால் எந்த படத்தையும் இயக்காமல் ஒதுங்கி இருந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் காமெடி கதாநாயகனாக மிர்ச்சி சிவாவை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். மாஸ் இயக்குனருடன் தமாஸ் நடிகர் சேர்வதால் அந்த காம்பினேஷன் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published by
adminram