More

அப்டேட்டு கொடு…இல்ல ஃபர்ஸ்ட்லுக்கை விடு… வெயிட்டிங்கே வெறியேறுது பங்கு….

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘வலிமை’. இப்படம் துவங்கி பல மாதங்கள் ஆகியும் இப்படம் தொடர்பான எந்த செய்தியையும் இப்படத்தின் தயாரிப்பாளார் போனிகபூர் தெரிவிக்கவில்லை. இது அஜித் ரசிகர்களை கோபப்படுத்தியது. டிவிட்டரில் அவரிடம் அப்டேட் கேட்டு அவர்கள் ஓய்ந்து போய்விட்டனர்.

Advertising
Advertising

கொரோனா ஊரடங்கிற்கு பின் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் துவங்கியுள்ளது. தீபாவளிக்கு இப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என தல ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், போனிகபூரை மௌனம் கடைபிடித்து வருகிறார்.

தீபாவளிக்கு சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் மற்றும் விஜயின் மாஸ்டர் ஆகிய படங்களின் டீசர் வீடியோ வெளியாகவுள்ளது. ஆனால், வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் கூட வெளியாகும் என அறிவிக்கப்படவில்லை. இது தல ரசிகர்களுக்கு மேலும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மதுரையில் வலிமை அப்டேட் கேட்டு தல ரசிகர்கள் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அதில் ‘ காணவில்லை. போனிகபூர் அவர்களே, கடந்த 8 மாதங்களாக வலிமை படத்தின் அப்டேட் காணவில்லை’ என சில இடங்களிலும், கொய்யால ஒன்னு வலிமை அப்டேட் கொடு.. இல்ல ஃபர்ஸ்ட் லுக் விடு.. வெயிட்டிங்கே வெறியேறுது பங்கு’ என வாசகம் எழுதப்பட்ட போஸ்டர்கள் சில இடங்களிலும் ஒட்டப்பட்டுள்ளது.

Published by
adminram

Recent Posts