Categories: latest news

மேனா மினிக்கியாக மாறிய தங்கலான் பார்வதி!.. ஜி.வி. பிரகாஷ் பாட்டு என்னம்மா இருக்குது கேளுங்க!..

பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான தங்கலான் ட்ரெய்லர் படத்தின் கோணத்தை புதிதாக ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்திய நிலையில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகியுள்ள மினிக்கி மினிக்கி மேனா மினிக்கி பாடல் வரும் 17-ஆம் தேதி புதன்கிழமை வெளியாக காத்திருக்கிறது.

 

அதனை முன்னிட்டு தற்போது அந்தப் பாடலின் முன்னோட்ட வீடியோவை இயக்குனர் பா. ரஞ்சித் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சூரரைப் போற்று, அசுரன் போன்ற படங்களுக்கு தாறுமாறான இசையை அமைத்த ஜிவி பிரகாஷ் விவாகரத்து சர்ச்சைக்கு பிறகு டல்லாக இருந்து வந்த நிலையில், தங்கலான் பாடல் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது.

முதல் சில வரிகளே ஈர்க்கின்றன. முழு பாடலும் வெளியானால் நிச்சயம் பாடல் ஹிட் அடித்து விடும் என ரசிகர்கள் ஜி.வி. பிரகாஷபாராட்டி வருகின்றனர். சியான் விக்ரம் செமையா இருக்காரு என்றும் நிச்சயம் அவருக்குத்தான் இந்த ஆண்டு தேசிய விருது கிடைக்கும் என்றும் கூறுகின்றனர்.

மலையாள நடிகை பார்வதி மரியான் படத்தில் தனுஷை போல ஒல்லியாக இருந்தார். ஆனால், இந்த பாடலில் என்ன இவ்வளவு சதை போட்டிருக்காரே என அவரை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி விட்டனர்.

எப்படி இருந்தாலும், பார்வதி தனது நடிப்பால் சியான் விக்ரமுக்கே டஃப் கொடுப்பார் என்றும் இன்னொரு மலையாள நடிகையான மாளவிகா மோகனன் சூனியக்காரியாக நடித்துள்ள நிலையில், என்ன பண்ண போகிறாரோ என்கிற பயம் ரசிகர்களுக்கு லைட்டாக இருக்கத்தான் செய்கிறது.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க..

https://x.com/beemji/status/1812817119022604320

 

Saranya M

Recent Posts

Kaalidas 2 Box Office: காளிதாஸ் 2 முதல் நாள் வசூல்: விரக்தியில் படக்குழு

தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் பரத் முக்கியம்ானவர். இவர் நடிப்பில் காதல் , 'வெயில்', எம்டன் மகன், 555, காளிதாஸ்,…

1 hour ago

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

13 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

14 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

15 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

16 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

22 hours ago