37 வயதாகியும் பெண் கிடைக்கவில்லை ; விபரீத முடிவால் சிக்கலில் சிக்கிய நபர்

Published On: December 27, 2019
---Advertisement---

6ad81058aec8cf9b5296b473d48fc377

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரை சேர்ந்தவர் ஜெய லட்சுமணன். இவருக்கு வயது 37. இவர் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்தார்.  இவருக்கு பல வருடங்களாக பெண் பார்த்தும் எதுவும் சரியாக அமையவில்லை. மேலும், 37 வயதாகி விட்டதால் யாரும் அவருக்கு பெண் கொடுக்க முன்வரவில்லை.

எனவே, கரூர் பகுதியை சேர்ந்த ஒரு 17 வயது சிறுமியின் பெற்றோரை ஜெயலட்சுமணனின் தாய் நல்லம்மாள் சம்மதிக்க வைத்துள்ளார். இதைத்தொடர்ந்து, 6  மாதங்களுக்கு முன்பு அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில், இந்த தகவல் கரூர் மாவட்ட குழந்தைகள் நல ஆணையத்திற்கு  தகவல் வந்தது.எனவே, போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதில், சிறுமிக்கு கட்டாய கல்யாணம் நடைபெற்றது தெரியவந்தது. சிறுமியும் போலீசாரிடம் புகார் கொடுத்தார். 

இதைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை, தாய், உறவினர் சிலரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெயலட்சுமணின் தாய் நல்லம்மாளை போலீசார் தேடி வருகின்றனர்.

Leave a Comment