மூன்றாவது திருமணத்துக்குத் தடையாக இருந்த கைக்குழந்தை – பெற்ற தாய் செய்த கொடூரம் !

Published On: December 31, 2019
---Advertisement---

e6bb0a3e2d5ac11b26d6cf8bc3aedab9

வேலூர் மாவட்டத்தில் மூன்றாவது திருமனத்துக்கு இடையூறாக இருந்த தனது கைக்குழந்தையை கொலை செய்து வீசிய சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது.

வேலூர் மாவட்டம் கம்மான்பேட்டை பகுதியில் உள்ள முருகன் கோயிலில் நேற்று முன் தினம் அழுகிய நிலையில் ஒரு குழந்தை சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. இது சம்மந்தமாக போலிஸார் விசாரணை நடத்த பக்கத்து ஊரில் குழந்தை ஒன்று காணாமல் போனதாக தகவல் கிடைக்க புகார் கொடுத்தவரை போலிஸ் அழைத்து விசாரித்துள்ளனர்.

அப்போது மஞ்சுளா என்ற அந்த பெண், போலீஸாரின் கேள்விகளுக்கு திக்கித் தடுமாறி பதில் சொல்ல சந்தேகம் அதிகமாகியுள்ளது. அதன் பின்னர் நடத்திய விசாரணையில் மஞ்சுளா குழந்தையை தான் தான் கொன்று வீசியதாக உண்மையை ஒத்துக்கொண்டுள்ளார். ஏற்கனவே இரு திருமணம் செய்துள்ள மஞ்சுளா மூன்றாவது திருமணத்துக்கு குழந்தை தடையாக இருந்தததால் இந்த கொடூர முடிவை எடுத்துள்ளார்.

Leave a Comment