">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
என் வாழ்வின் மோசமான நாட்கள்… நயன்தாரா இடையில் பிரேக் விட்டதற்கு இதுதான் காரணமாம்!
தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நயன்தாரா தமிழில் அஜித், விஜய் , ரஜினிகாந்த், சிம்பு, தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிஸியான நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமின்றி தெலுங்கு , மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழி படங்களில் அடுத்தடுத்து நடித்து ஹிட் கொடுத்து வருகிறார்.
ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து இயக்குனர்களின் ராசியான நடிகையாக வலம் வருண் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து சொந்த வாழ்க்கையில் பிசியாக இருந்தாலும் நடிப்பில் தூள் கிளப்புகிறார். தனது வாழ்வில் பல்வேறு இன்னல்களை சந்தித்து நிறைய சர்ச்சைகளில் சிக்கி பேசப்பட்டவர்.
இந்நிலையில் இடையில் சில காலம் சினிமாவிற்கு பிரேக் விட்டிருந்தவர் அட்லீயின் ராஜா ராணி படத்தின் மூலம் இரண்டாவது இன்னிங்க்ஸை துவங்கி தமிழ் சினிமாவின் உச்ச நடிகையாக வளர்ந்து நிற்கிறார். இந்நிலையில் அந்த இடைவெளி குறித்து பேசிய நயன்தாரா, ” நான் என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வாழந்து நான் இருந்தேன். என்னுடைய படத்தையோ பாட்டையோ கூட டிவியில் கூட நான் அப்போது பார்க்கவில்லை நான் தனிமையை விரும்பும் ஆள்.
கூட்டம் என்றால் எனக்கு ஆகாது. நான் பல முறை தவறாக குறிப்பிடப்பட்டிருக்கிறேன், தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறேன்.ஒரு கட்டத்தில் அதையெல்லாம் என் படம் தான் பேச வேண்டும் என்று நினைத்தேன். நான் லீட் ரோலில் நடிக்கும் படங்களில் அனைத்தையும் நான் தான் முடிவு செய்வேன். என கூறினார்.