இந்தியன் 2 ரொம்ப ரொம்ப சுமாரு... 160 படத்தில் வெறும் 3 தான்... ஆதங்கத்தை கொட்டிய திரையரங்கு ஓனர்...!
தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் இந்தியன் 2. இந்த திரைப்படத்தை இயக்குனர் சங்கர் இயக்கியிருந்தார். பிரம்மாண்டத்திற்கு பேர் போன சங்கர் இந்த திரைப்படத்தில் மிகப்பெரிய சறுக்களை சந்தித்து இருக்கின்றார். கமலஹாசன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரங்களை வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்ட போதிலும் திரையரங்குகளில் புதிய வரவேற்பு இல்லை.
ரசிகர்களிடமிருந்து தொடர்ந்து நெகட்டிவான விமர்சனங்களை மட்டுமே பெற்று வந்தது இந்த திரைப்படம். இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 இரண்டையும் சேர்த்து 500 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. ஒரு பகுதிக்கு 250 கோடி பட்ஜெட் என்று வைத்துக் கொண்டால் கூட இந்திய அளவில் மொத்தம் 148 கோடி தான் வசூல் செய்துள்ளது. இது வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியாக அமைந்திருக்கின்றது.
இந்நிலையில் இப்படம் குறித்து திரையரங்கு உரிமையாளரான திருச்சி ஸ்ரீதர் சில விஷயங்களை பகிர்ந்து இருக்கின்றார். அந்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது: "இந்தியன் 2 திரைப்படம் ரொம்ப ரொம்ப சுமாரான படம், கலவையான விமர்சனங்கள் என்று கூட சொல்ல முடியாது முழுவதும் நெகட்டிவ் விமர்சனங்கள் தான். முதல் நாளில் இருந்த கூட்டம் கூட இரண்டாவது நாளில் சுத்தமாக இல்லை.
அது மட்டும் இல்லாமல் மொகரம் பண்டிகைக்கு ஓரளவுக்கு கூட்டம் வரும் என்று எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் அந்த தினத்தில் சாதாரண அளவு கூட்டத்தை காட்டிலும் குறைவான அளவு மக்களே படத்தை காண வந்தார்கள். இது திரையரங்கு உரிமையாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இந்த வருடத்தில் மட்டும் தற்போது வரை 160 திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி இருக்கின்றன.
அதில் வெறும் மூன்று திரைப்படங்கள் மட்டும்தான் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் ஹிட்டுக் கொடுத்த திரைப்படங்கள். அதில் முதலாவதாக இருப்பது அரண்மனை 4 சுந்தர் சி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் அனைத்து தரப்பினரிடையே நல்ல வரவேற்பு கொடுத்திருந்தது. அதையடுத்து வெளியான கருடன் திரைப்படம் இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தை மகாராஜா திரைப்படம் பெற்றிருக்கின்றது.
இந்த மூன்று திரைப்படங்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் நல்ல வசூலை பெற்ற படங்களாக அமைந்திருந்தது. இப்படியே போனால் எங்கள் நிலைமை என்ன ஆவது, பணத்தை போட்டு படங்களை திரையரங்குகளில் வெளியிடுகிறோம். அதிலும் பெரிய பட்ஜெட் படங்கள் கை கொடுக்கும் என்று நம்பிக்கையில் இருந்தால் இப்படி மோசமாகி விடுகின்றது" என்று தனது வருத்தத்தை பதிவிட்டு இருந்தார் திருச்சி ஸ்ரீதர்.