வாய வெச்சுட்டு சும்மா இல்லாம.. தங்கலான் படத்த சிக்கலில் மாட்டிவிட்ட பா ரஞ்சித்.. பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்..!
தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் பா ரஞ்சித். தொடர்ந்து பல நல்ல திரைப்படங்களை கொடுத்து வந்த இவர் தற்போது நடிகர் விக்ரமை வைத்து தங்கலான் என்ற திரைப்படத்தை எடுத்திருக்கின்றார். இந்த திரைப்படத்தில் விக்ரம், மாளவிகா மோகன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
சுதந்திரப் போராட்ட காலத்தில் கேஜிஎப் என்ற பகுதியில் வாழ்ந்து தமிழர்களை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் தான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றது. அதன்படி இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ளது.
இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருக்கின்றார். மேலும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. அது மட்டும் இல்லாமல் கடந்த 17ஆம் தேதி இப்படத்தில் இருந்து 'மினுக்கி மினுக்கி' என்ற முதல் சிங்கிள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. படம் ஜனவரி மாதமே வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தள்ளி வைக்கப்பட்டு தற்போது ஆகஸ்ட் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இயக்குனர் பா ரஞ்சித்தின் நெருங்கிய நண்பரான பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவரின் உயிரிழப்புக்கு நீதி வேண்டும் என்று கேட்டு தொடர்ந்து பா ரஞ்சித் போராடி வருகின்றார். இந்த வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்கவில்லை .
சட்டரீதியாக சரியாக விசாரித்து சரியான குற்றவாளிகளை கண்டுபிடிக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் இருந்தபோது பட்டியலின மக்களின் பிரச்சினை தீராமல் இருந்தது. அப்போது திமுக இதனை கடுமையாக எதிர்த்தது. தற்போது திமுக ஆட்சியில் இருக்கின்றது. இருப்பினும் பட்டியலிட மக்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அதிகாரிகளுக்கு உரிய அதிகாரம் இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது என்று தொடர்ந்து திமுக அரசுக்கு எதிராக குற்றச்சாட்டி வருகின்றார்.
பா ரஞ்சித் சில இடங்களில் வரம்பு மீறி பேசி வருவதால் தங்கலான் திரைப்படத்திற்கு இதன் மூலம் சில பிரச்சனைகள் வர வாய்ப்பு இருக்கின்றது. தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்வது திமுக அரசு தான். அவர்களை பற்றியே அவதூறாக பா ரஞ்சித் பேசுவது படத்திற்கான சிக்கலை ஏற்படுத்தும் என்று பலரும் கூறி வருகிறார்கள். மேலும் அவருக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. இந்த படத்தை காசு போட்டு எடுத்த தயாரிப்பாளருக்கு தான் பிரச்சனை. இவர் பேசாமல் பேசிவிட்டு போகின்றார். ஆனால் தயாரிப்பாளர் தான் கதி கலங்கி போய் இருக்கின்றார் என்று தமிழ் சினிமா வட்டாரங்களில் பலரும் கூறி வருகிறார்கள்.