Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இதெல்லாம் முழுக்க முழுக்க வதந்தி: வடிவேலு

தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடி நடிகராக இருந்த வைகைப்புயல் வடிவேலு அவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ததை அடுத்து திரையுலகில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார்.

29cdcbc395ca147d58a27560b0ad12c6

தமிழ் சினிமாவில் நம்பர்-1 காமெடி நடிகராக இருந்த வைகைப்புயல் வடிவேலு அவர்கள் கடந்த 2014 ஆம் ஆண்டு திமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்ததை அடுத்து திரையுலகில் இருந்து விலக்கி வைக்கப்பட்டார். மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் வடிவேலுவுக்கு வாய்ப்பு கொடுக்க பல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மறுத்தனர். இதனால் அவருடைய திரையுலக வாழ்க்கையை கிட்டத்தட்ட முடியும் நிலை ஏற்பட்டது

இருந்தும் ஒருசில வாய்ப்புகள் அவருக்கு கிடைத்த நிலையில் கிடைத்த படங்களுக்கு அவர் சரியாக ஒத்துழைப்பு கொடுக்காத காரணத்தினால் அந்த படங்கள் பாதியில் நிற்கின்றன. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கமலஹாசன் நடிக்கும் ’தலைவன் இருக்கின்றான்’ என்ற படத்தில் வடிவேலு முக்கிய கேரக்டரில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கமல்ஹாசன் நடித்து வரும் ’இந்தியன் 2’ படப்பிடிப்பே இன்னும் சரியாக நடைபெறாத நிலையில், இந்த படத்தை முடித்துவிட்டு அவர் எப்போது ’தலைவன் இருக்கிறான்’ படத்தை ஆரம்பிக்கப் போகிறார் என்று தெரிய இல்லை என்பதால் வடிவேலுவின் அடுத்த படம் எப்போது வரும் என்றே தெரியவில்லை 

இந்த நிலையில் வடிவேலு வெப்சீரீஸ்களில் நடிக்க இருப்பதாக ஒரு சில ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வடிவேலு எந்த வெப் சீரிஸிலும் தான் நடிக்கவில்லை என்றும் இந்த தகவல் முழுக்க முழுக்க வதந்தி’ என்றும் கூறியுள்ளார். மேலும் தான் நடிக்க இருக்கும் புதிய திரைப்படம் ஒன்றின் அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top