More

விஷாலோடு பிணக்கு… மிஷ்கினின் அடுத்த பட ஹீரோ இவர்தான் !

மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.

Advertising
Advertising

இயக்குனர் மிஷ்கின் இயக்கி ஜனவரி மாதம் வெளியான சைக்கோ திரைப்படம் கலவையான விமர்சனங்களையும் தாண்டி வசூலில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவர் அடுத்ததாக இயக்க ஒப்பந்தமான துப்பறிவாளன் 2 படத்தில் இருந்து விஷாலோடு ஏற்பட்ட பிரச்சனைக் காரணமாக விலகினார். மீதிப் படத்தை விஷாலே இயக்க உள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் மிஷ்கின் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தனது அடுத்தப் படம் பற்றி விரைவில் அறிவிக்கப்படும் எனக் கூறியிருந்தார். அதுகுறித்து இப்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அவரது அடுத்த படத்தில் இப்போது சிம்பு நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிம்பு இப்போது நீண்ட பிரச்சனைகளுக்குப் பின் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர் இந்த படத்தில் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

Published by
adminram

Recent Posts