More

யு டியூபில் இந்த சாதனை செய்த ஒரே படம் இதுதான் – சிவகார்த்திகேயன் பெருமிதம்!

சிவகார்த்திகேயன் தயாரித்த கனா திரைப்படத்தின் இருபாடல்கள் யுடியூபில் முக்கியமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளது.

Advertising
Advertising

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அவரது நண்பர் அருண்ராஜா காமராஜா இயக்குனராக அறிமுகமான திரைப்படம் கனா. இதில் பெண் கிரிக்கெட்டராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். இந்த படம் வெற்றிப்பெற்ற நிலையில் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் முனுமுனுக்கும் அளவுக்கு ஹிட்டாகின.

அதிலும் குறிப்பாக வாயாடி பெத்த புள்ள மற்றும் ஒத்தையடி பாதையிலே ஆகிய இரு பாடல்களும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகின. இவை இரண்டும் யு டியூபில் 10 கோடி பேரால் பார்க்கப்பட்டுள்ளன. தமிழ் சினிமாவில் ஒரே படத்தைச் சேர்ந்த இரு பாடல்கள் இந்த சாதனையை நிகழ்த்துவது இதுதான் முதல் முறை. இது குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் டிவிட்டரில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

Published by
adminram

Recent Posts