ஒரே படத்தில் மூன்று பிக்பாஸ் போட்டியாளர்கள்

Published On: December 28, 2019
---Advertisement---

77e0a515fb475106d3c7eb32d1ea03ae

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் சினிமா வாய்ப்புகள் கொட்டோ கொட்டு என்று கொட்டும் என்றும், சினிமாவில் மிகப் பெரிய ஆளாக வந்து விடுவார்கள் என்றும், கமல்ஹாசன் உள்பட பலர் கூறினர். ஆனால் உண்மை நிலைமையோ பிக்பாஸ் டைட்டில் வென்றவர்களுக்கு கூட படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. அப்படியே படம் கிடைத்தாலும் அந்த படங்கள் படு தோல்வி ஆகி வருகின்றன

இந்த நிலையில் பிக்பாஸ் முதல் சீசனில் டைட்டில் வின்னரான ஆரவ் நடித்த ’மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’ திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மூன்று நாள்களில் தியேட்டரை விட்டு காலி ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து தற்போது ஆரவ், ‘ராஜபீமா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே ஓவியா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 

a7c074162e78f717265d0c4649bac44e

இதனை அடுத்து தற்போது இன்னொரு பிக்பாஸ் பிரபலமான யாஷிகா ஆனந்து இந்த படத்தில் இணைந்துள்ளார். இவர் இந்த படத்தில் பத்திரிகையாளராக நடித்தி வருவதாகவும் இந்த படத்தின் முக்கிய கேரக்டர்களில் யாஷிகாவின் கேரக்டர்களில் ஒன்று என்றும் பத்திரிகையாளராக நடித்தாலும் அவரது கவர்ச்சியில் பஞ்சம் வைக்காமல் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது 

ஆரவ், ஓவியா, யாஷிகா என மூன்று பிக்பாஸ் போட்டியாளர்கள் நடிக்கும் இந்த படத்தை சம்பத் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாசர், சாயாஜி ஷிண்டே, கேஎஸ் ரவிக்குமார், யோகி பாபு உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது

Leave a Comment