">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
கொரோனாவால் இறந்தவர்களை அடக்கம் செய்ய எதிர்த்தால் குண்டர் சட்டம் – கமிஷனர் எச்சரிக்கை
சென்னை கீழ்பாக்கம் பகுதியில் உள்ள 3 தனியார் மருத்துவமனைகளின் நிர்வாக இயக்குனரான 55 வயது மருத்துவருக்கு கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் மரணமடைந்தார்.
அதையடுத்து, அண்ணாநகர் பகுதியில் உள்ள வேளாங்காடு கல்லறையில் அவரின் உடலை அடக்கம் செய்ய எடுத்து சென்றனர். ஆனால், அவரது உடலை இங்கு புதைக்கக் கூடாது எனக்கூறி அப்பகுதிமக்கள் சுமார் 20 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் ஆம்புலன்ஸின் கண்ணாடியை அடித்து உடைத்தனர். எனவே, ஆம்புலன்ஸில் இருந்த இருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. அதன்பின் வேறு பகுதியில் அவரின் உடல் புதைக்கப்பட்டது. இதுதொடர்பாக 20 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் மருத்துவர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சென்னை பெருநகரில் கொரோனாவால் இறந்தவர்களின் உடல் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் விசுவநாதன் எச்சரித்துள்ளார்.