More

அடுத்த தலைமுறை ஸ்மார்ட் சைக்கிள்கள்… சென்னையில் தொடங்கிவைத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சென்னை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு பகுதியாக சென்னையின் 76 இடங்களில் 500 ஸ்மார்ட் சைக்கிள்கள் மக்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. சென்னை மாநகராட்சியின் சார்பில் இந்த சைக்கிள்கள் மக்களுக்கு வாடகை அடிப்படையில் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளன. சென்னை மெரினா பீச், பாண்டி பஜார், ஓ.எம்.ஆர் மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் இந்த ஸ்மார்ட் சைக்கிள்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. 

Advertising
Advertising

இந்தசூழலில், அடுத்த தலைமுறை ஸ்மார்ட் சைக்கிள்கள் பயன்பாட்டை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா பீச்சில் தொடங்கிவைத்தார். இந்த சைக்கிள்கள் ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் 45 கி.மீ தூரம் வரை செல்லக் கூடியவை. முன்னர் பயன்பாட்டில் இருந்த சைக்கிகள் ஒரு நிமிடத்துக்கு ஒரு ரூபாய் என்று கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில்,  தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சைக்கிள்களை அரை மணி நேரத்துக்கு ரூ.5.50 என்ற வாடகையில் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்பிறகு ஒரு மணி நேரத்த்துக்கு ரூ.9.90 என்ற அளவில் பொதுமக்களிடமிருந்து வாடகை வசூலிக்கப்படும். 

இதற்காகப் பிரத்யேகமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளா செல்போன் ஆப்பில் சைக்கிள்களை புக் செய்வது, அதற்கான கட்டணங்களைச் செலுத்துவது போன்றவற்றை பொதுமக்கள் மேற்கொள்ளலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்திருக்கிறது. செல்போன் செயலியில் பதிவு செய்த பின்னர், பேமெண்ட் வேலெட் ஆக்டிவேட் செய்யப்பட்டு க்யூ ஆர் கோட் மூலம் சைக்கிள்களை அன்லாக் செய்யலாம். 

இதுகுறித்து பேசிய ஸ்மார்ட் சைக்கிளின் மார்க்கெட்டிங் பிரிவு துணைத் தலைவர் ரஞ்சித், “கொரோனாவுக்குப் பின் தினசரி 50-100 சைக்கிள்கள்தான் தினசரி வாடகைக்குச் சென்றன. ஆனால், கடந்த சில வாரங்களாக இந்த எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஸ்மார்ட் பைக்கின் டிரையல்ஸை நாங்கள் 10 இடங்களில் ஏற்பாடு செய்திருந்தோம். அதன்பின்னர் இந்த எண்ணிக்கைக் கணிசமாக அதிகரித்திருக்கிறது. சர்வதேச ஆய்வு ஒன்றின்படி, பீக் டிராபிக் சமயத்தில் கார் அல்லது பைக்கில் ஒரு இடத்தை அடைவதை விட விரைவாக இந்த ஸ்மார்ட் பைக்கில் அடையலாம் என்று தெரியவந்திருக்கிறது. மக்கள் இதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்’’ என்று தெரிவித்தார். 

Published by
adminram

Recent Posts