More

இன்னைக்கு அவர் எவ்ளோ பிரபலம்… ஆனா அன்னைக்கு – ஜெண்டில்மேன் படத்தில் இருக்கும் இந்த நடிகர் யார் தெரியுதா?

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான மொட்ட ராஜேந்திரனின் பழையப் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Advertising
Advertising

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்டண்ட் நடிகராக இருந்த மொட்ட ராஜேந்திரனை நான் கடவுள் படமும் பாஸ் என்கிற பாஸ்கரன் படமும் நடிகராக அடையாளம் காட்டின. மொட்டைத் தலையுடன் இருக்கும் அவரை எல்லோரும் மொட்டை ராஜேந்திரன் என்றே அழைத்து வருகின்றனர். ஸ்டண்ட் நடிகராக இருக்கும் போது ஒரு ஸ்டண்ட் காட்சியின் போது கெமிக்கல் தண்ணீரில் குதித்த போது அலர்ஜி ஏற்பட்டு அவரின் உடலில் முடிகள் எல்லாம் கொட்டி விட்டன.

இந்நிலையில் அவர் ஜெண்டில் மேன் படத்தில் தலையில் முடி மற்றும் மீசையுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அப்போது இளமையான தோற்றத்தில் முடியோடு இருக்கும் ராஜேந்திரன் ஆள் அடையாளமே தெரியாத நிலையில் உள்ளார்.

Published by
adminram

Recent Posts