Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

தளபதி விஜய் நடித்த டாப் 10 படங்கள்

தளபதி விஜய் நடித்த டாப் 10 படங்கள்

1f48ee55bcc8c12ef46b98c6d6e3e4bf-2

நடிகர் விஜய் நடித்த படங்கள் பெரும்பாலனவை சூப்பர்ஹிட் ரகங்கள் தான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விஜய் படங்கள் என்றால் விரும்பிப் பார்ப்பார்கள். இருந்தாலும் நமக்கு பிடித்த படங்கள் என்றால் அதைத் திரும்ப திரும்பப் பார்ப்போம் அல்லவா…அப்படிப்பட்ட படங்களை உங்களுக்காக டாப் 10 வரிசையில் தந்துள்ளோம். 

லவ் டுடே

1997ல் வெளியான இப்படத்தை பாலசேகரன் இயக்கினார். விஜய், சுவலெட்சுமி, மந்த்ரா, ரகுவரன், கரன், தாமு ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தை ஆர்.பி.சௌத்ரி தயாரித்தார். 

தெலுங்கு மொழியில் பவன் கல்யாண் மற்றும் தேவயானி நடிப்பில் சுஸ்வாகதம் என்ற பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது. வித்தியாசமான கிளைமாக்ஸ் கொண்ட இத்திரைப்படம் 100 நாள் ஒடி வெற்றிப் பெற்றது. என்ன அழகு எத்தனை அழகு.., ஏன் பெண்ணென்று…சலாமியா…பாடல்கள் பிரபலமானவை. 

நேருக்கு நேர் 

4bc1c2fd7808368bc51ce3a274db0112

நேருக்கு நேர் 1997 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப்படம். வசந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சூர்யா,விஜய்,சிம்ரன்,கௌசல்யா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவு இயக்குனர் கே.வி.ஆனந்த். தேவா இசை அமைத்துள்ளார். எங்கெங்கே…எவர் கண்டார்…அகிலா அகிலா பாடல்கள் சூப்பர் ஹிட்டானவை. 

பகவதி 

பகவதி என்பது 2002ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்த படம் ஏ. வெங்கடேசின் இயக்கத்திலும் பட்டுக்கோட்டை பிரபாகரின் திரைக்கதையிலும் வெளிவந்தது. கே.முரளிதரன், வி.சுவாமிநாதன், சி.வேணுகோபால் ஆகியோர் தயாரித்துள்ளனர். விஜய், ரீமாசென், ஆசிஷ்வித்யார்த்தி, வடிவேலு ஆகியோர் நடித்துள்ளனர். அள்ளு அள்ளு…ஜூலை மலர்களே…கை…கை…கை…கை..கை…வைக்குறா….விக்கல்….ஆகிய பாடல்கள் துள்ள வைக்கின்றன. இந்தப்படத்தில் விஜய் டீ கடையில் டீ ஆத்தும் ஸ்டைல் தனி ரகம். ஆக்ஷன் படமான இந்தப்படத்தில் விஜய் ரசிகர்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டார்.

திருமலை 

திருமலை என்பது 2003ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தப்படம் ரமணாவின் இயக்கத்திலும் திரைக்கதையில்; வெளிவந்துள்ளது. தெலுங்கில் கௌரி என்ற பெயரில் இத்திரைப்படம் 2004ல் மீண்டும் உருவாக்கப்பட்டது. 

விஜய், ஜோதிகா, விவேக், ரகுவரன், கௌசல்யா, கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஒளிப்பதிவு இயக்குனர் ரத்னவேலு. வித்யாசாகர் இசையில் தாம் தக்க தீம் தக்க, வாடியம்மா ஜக்கம்மா.., நீயா பேசியது.., அழகூரில், திம்சுக்கட்டை…ஆகிய பாடல்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தன. விஜய் நடிப்பில் ஆக்ஷன், அதிரடி, சென்டிமென்ட், காமெடி என படம் பட்டையைக் கிளப்பியது. 

சிவகாசி 

சிவகாசி 2005 ல் வெளியான தமிழ்ப்படம். ஏ.எம்.ரத்னம் தயாரிக்க பேரரசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய், அசின், பிரகாஷ் ராஜ், கீதா, வையாபுரி, சிட்டி பாபு மற்றும் பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அண்ணன் தங்கை பாசப்பிணைப்பில் கதைக்கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் இது. இப்படத்தில் நயன்தாரா கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்த படம். 

வாடா…வாடா…கோடம்பாக்கம் ஏரியா….தீபாவளி தீபாவளி…அட என்னாத்த சொல்வேனுங்கோ…ஆகிய பாடல்கள் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்தவை.

பூவே உனக்காக

fbd60f2c4c5ad9287647579e679eae17

ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் 1996 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த காதல் திரைப்படம் பூவே உனக்காக. விஜய், சங்கீதா, அஞ்சு அரவிந்த், சார்லி, நாகேஷ் மற்றும் நம்பியார் ஆகியோர்  நடித்திருந்தனர். முரளி இத்திரைப்படத்தில் ஒரு பாடலில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். இப்படம் விஜயின் திரைவாழ்க்கையில் முதல் பெரிய வெற்றிப் படம் மற்றும் திருப்புமுனையாக அமைந்தது. இத்திரைப்படம் தெலுங்கில் சுபகனக்‌ஷலு (1997), கன்னடத்தில் இ ஹிருதய நினகாகி (1997) மற்றும் இந்தியில் பதாய் ஹோ பதாய் (2002) என்ற பெயர்களில் மறு ஆக்கம் செய்யப்பட்டது. மேலும் இத்திரைப்படம் இந்தியில் மன்சில் பியார் கி (2016) என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பாடல்கள் அத்தனையும் பூந்தென்றலாய் நம்மைத் தாலாட்டுகின்றன. 

ஆனந்தம் ஆனந்தம் பாடும்…சொல்லாமலே….யார் பார்த்தது…நெஞ்சோடு தான் பூ பூத்தது…மச்சினிச்சி…வர்ற நேரம்…சிக்லட்டு சிக்லட்டு ஆகிய பாடல்கள் தெவிட்டாதவை.

ப்ரண்ட்ஸ் 

560e18ab2f4777777cf835b6eb308b0c

ப்ரண்ட்ஸ் 2001ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்ப்படம். அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் வெளியானனது. கோகுல் கிருஷ்ணாவின் வசனம் எழுதினார். விஜய், சூர்யா, வடிவேலு, ரமேஷ்கண்ணா, தேவயானி, விஜயலெட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். வடிவேலுவின் காமெடி படத்தில் சூப்பராக இருக்கும். அவர் பெயிண்டிங் காண்ட்ராக்ட்டராகவும், விஜய், சூர்யா உள்பட பலர் அப்ரண்டீசாக நடித்து விழுந்து விழுந்து சிரிக்கும் வகையில் நீண்ட காமெடியை இப்படத்தில் கண்டு ரசிக்கலாம். 

இந்தத் திரைப்படம் ப்ரண்ட்ஸ் என்ற மலையாளத் திரைப்படத்தைத் தழுவியே வெளிவந்துள்ளது. 

தென்றல் வரும், குயிலுக்கு கூ கூ…, ருக்கு ருக்கு.., மஞ்சள் பூசும், பெண்களோட போட்டி, பூங்காற்றே…பாடல்கள் இதமானவை. 

நண்பன் 

87c481f0634d043148cbbe9c6da4f90a-3

2012ல் ஷங்கர் இயக்கத்தில் வெளியான தமிழ்ப்படம் ஆகும். இப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீPகாந்த், இலியானா, சத்யராஜ், சத்யன், அனுயா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் த்ரீ இடியட்ஸ் (2009) என்ற ஹிந்தி படத்தின் ரீமேக். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் என் ப்ரண்டப் போல யாரு மச்சான்…, ஆல் இஸ் வெல்,., அஸ்கு லஸ்கா அம்மோ…, ஒல்லி பெல்லி…ஜெல்லி…பாடல்கள் சூப்பர்ஹிட் ரகங்கள். 

ஆல் இஸ் வெல் என்பது எல்லாம் நல்லதுக்கே என்பதைக் குறிக்கின்றது. அனைத்தும் நல்லதாகவே நடக்கும் என்ற நேர் மனப்பாங்கை ஏற்படுத்தும் என்ற மந்திர வார்த்தை படத்தில் அடிக்கடி வருகிறது.  அவ்வாறு சொல்வதன் மூலம் பிரச்சினைகள் சரியாகி விடும் என்றில்லை. ஆனாலும் பிரச்சினைகளைச் சந்திப்பதற்கான துணிவைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதே படத்தின் மையக்கருத்து. இப்படத்தின் பாடல்காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டது.

கில்லி 

173ffad3eb29e40639ffa35dce631e31-2-3

கில்லி என்றால் எதற்கும் துணிந்தவர் என்று பொருள். படத்தைப் பார்த்தால் விஜயின் கதாபாத்திரம் அதைத்தான் சொல்லும். 2004 ஆம் ஆண்டு வெளிவந்த ஒரு மாபெரும் வெற்றித் திரைப்படம் இது. ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் தரணி இயக்கத்தில் வெளியானது. விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் 2001-ல் வெளியான பிரெண்ட்ஸ் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது. படம் ஆரம்பம் முதல் முடிவு வரை விறுவிறுப்பாகவே செல்லும் வகையில் படத்தை எடுத்து புதிய அத்தியாயத்தைத் தமிழ்த்திரையுலகில் கொண்டு வந்த படம் இதுதான். சரவணவேலுவாக விஜய்யும், முத்துப்பாண்டியாக பிரகாஷ்ராஜூம் படத்தில் வெளுத்து வாங்கியிருப்பார்;கள். 

கபடி, கபடி…அர்ச்சுனரு வில்லு…, அப்படிப்போடு…போடு..போடு…சூரத் தேங்கா…, கொக்கரக்கோ…பாடல்கள் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தன. 

மாஸ்டர் 

மாஸ்டர் என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி சண்டை பரபரப்பூட்டும் திரைப்படம். லோகேஷ் கனகராஜ் என்பவர் எழுதி இயக்க சேவியர் பிரிட்டோ, சுனே ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜூன் தாஸ், சாந்தனு பாக்யராஜ்  உள்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கான ஒளிப்பதிவு சத்யன் சூரியன் மற்றும் படத்தொகுப்பு பிலோமின் ராஜ். 

வாத்தி கம்மிங், குட்டி ஸ்டோரி, வாத்தி ரெய்டு…பாடல்கள் பட்டையைக் கௌப்பும் ரகங்கள். படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் விஜய்க்கு இணையாக வில்லன் விஜய் சேதுபதி நடிப்பில் மிரட்டியிருப்பார். 

 

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top