
அஜித் நடித்தது நடித்து ’வலிமை’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்தது என்பது தெரிந்ததே. முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ஹைதராபாத்தில் இருந்து சென்னை திரும்பியுள்ள ’வலிமை’ படக்குழுவினர் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி விட்டனர்
’வலிமை’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ரேகா கார்டனில் இன்று முதல் மூன்று நாட்கலுக்கு நடைபெற இருப்பதாகவும் அதில் அஜித் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது
இந்த படப்பிடிப்பில் போலீஸ் ஸ்டேஷன், லாக்கப் போன்ற காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும் இதற்காக போலீஸ் ஸ்டேஷன் செட் ஒன் ரேகா கார்டனில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
இந்த மூன்று நாள் படப்பிடிப்பை முடித்துவிட்டு அடுத்ததாக கோகுலம் ஸ்டுடியோவில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும், அங்கு 20 நாட்கள் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது
’நேர் கொண்ட பார்வை’ படத்திற்கு பின் மீண்டும் அஜித், எச்.வி்னோத் மற்றும் போனிகபூர் இணையும் இந்த படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது



