More
Categories: latest news tamil movie reviews

நல்லவேளை டிவியில் ரிலீஸ் ஆச்சு… துக்ளக் தர்பார் திரைவிமர்சனம்!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துக்ளக் தர்பார் திரைப்படம் இன்று விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு சன் டிவி, நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. அரசியலை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், காயத்ரி, கருணாகரன் மற்றும் பகவதி பெருமாள் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

Advertising
Advertising

இந்த படத்திற்கு 96 புகழ் கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.இதில் அரசியல் பெரும்புள்ளியாக  ராயப்பன் (பார்த்திபன்). நடித்துள்ளார்.ராயப்பனை போலவே அரசியல்வாதியாக ஆகவேண்டும் என சிங்காரவேலன்  (விஜய் சேதுபதி) ஆசைப்பட்டு கவுன்சிலராகவும் ஆகிறார்.

அதன் பின்னர் இருவரும் மோதிக்கொள்ள ஆரம்பிக்கின்றனர். இருவரும் நில விவகாரத்திற்காக 50 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கி மீடியாவில் மாட்டிக்கொள்கின்றனர். அதை கொடுக்க முயற்சிக்கும் சமயத்தில் அந்த 50 கோடி பணம் காணாமல் போகிறது. அதை தேடும் வேளையில் இறங்கும் ராயப்பன் பணத்தை எடுத்தவன் யார்? எதற்காக திருடினான் என்பது குறித்து மீதி கதை நகருகிறது.

படத்தின் ப்ளஸ்:

சீரியசான அரசியல் கதை என்றாலும் அதை ஜாலியாகவே எடுத்து சென்றிருக்கிறார் இயக்குனர். பார்த்திபன், பகவதி பெருமாள், விஜய் சேதுபதி, கருணாகரன் ஆகியோரின் பல இடங்களில் கவலை மறந்து சிரிக்க வைத்தது படத்தின் ப்ளஸ்.

படத்தின் மைனஸ்:

ஜாலியாக கொண்டு செல்லவேண்டும் என நோக்கத்தில் படத்தை எடுத்ததால் சீரியசான காட்சியில் கூட சிரிப்பு தான் வருகிறது. 50 ஆயிரம் பணம் காணாமல் போகும்போது கூட அதன் சீரியஸ்னஸ் யாருக்கும் வரவில்லை. இதற்கிடையில் சம்மந்தமே இல்லாதது போல் விஜய்சேதுபதி ராஷி கண்ணாவின் காதல் காட்சி. இந்த படத்தின் முடிவில் சத்யராஜ் சிறப்பு காட்சியில் நடித்து நல்ல ஒரு நல்ல முடிவை கொடுத்துவிட்டார்.  இந்த படத்தின் மதிப்பு 3/5… படத்தை ஒரு முறை வீட்டில் இருந்தபடியே பார்க்கலாம்.

வரும் காட்சிதான் படத்தின் சிறந்த பகுதியாக அமைகிறது.

 

Published by
adminram

Recent Posts