More

இரண்டு மாத இடைவெளி… சின்னத்திரை தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு நிபந்தனைகளோடு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

தமிழகத்தில் கொரொனா காரணமாக சின்னத்திரை மற்றும் சினிமாப் படப்பிடிப்புகள் நடக்கவில்லை. இதனால் சினிமாவை விட அதிகமாகப் பாதிக்கப்பட்டது சின்னத்திரை உலகம்தான். தினமும் தொலைக்காட்சிக்க்கு புது எபிசோட்கள் ஒளிபரப்பட வேண்டிய இக்கட்டால் கடந்த இரண்டு மாதத்துக்கு மேலாக பழைய சீரியல்களை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகின்றன.

இந்நிலையில் இப்போது சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்திக் கொள்ள தமிழக அரசு நிபந்தனைகளோடு அனுமதி அளித்துள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைக் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

  • Indoor ல் படப்பிடிப்புகள் மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
  • கட்டுப்பாட்டு(containment) பகுதிகளில் படப்பிடிப்புகளுக்கும்
    அனுமதி இல்லை.
  • படப்பிடிப்புத் தளத்தில் மொத்தம் 20 பேருக்கு மிகாமல் படப்பிடிப்பு தளத்தில் ஆட்கள் இருக்க வேண்டும்.
  • படப்பிடிப்பில் நடிக்கும் நேரம் தவிர பிற நேரங்களில் நடிகர், நடிகையர் மாஸ்க் அணிய வேண்டும்.
  • சென்னையில் படப்பிடிப்பு நடந்தால் மாநகராட்சியிலும், வெளி மாவட்டங்களில் நடந்தால் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமும் அனுமதி பெற வேண்டும்.
  • படப்பிடிப்பை பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்க கூடாது.
  • படப்பிடிப்பு தளங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாஸ்க் அணிதல் மற்றும் சானிட்டைசர் உபயோகித்தலை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்

Published by
adminram