More

மே 1ம் தேதி வலிமை ஃபர்ஸ்ட் லுக் இல்லை! – கை விரித்த போனி கபூர்…

போனி கபூர் தயாரிப்பில் நடிகர் அஜித் நடித்துவரும் திரைப்படம் வலிமை. இப்படத்தை ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பின் வினோத் இயக்குகிறார். படத்தில் நடிக்கும் நடிகர்கள், ஏன் அஜித்தின் ஜோடிக்கூட இதுவரை யார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. அவ்வப்போது படப்பிடிப்பு தளத்தில்  சில புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது.. இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. படம் துவங்கி 2 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் வலிமை படத்தின் அப்டேட்டை கேட்டு நச்சரித்து வருகின்றனர். 

Advertising
Advertising

எனவே,  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு கடினமாக உழைத்து வருகிறோம். சற்று பொறுத்துக் கொள்ளுங்கள் என போனி கபூரும் கூறியிருந்தார்.எனவே அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதி வலிமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போது அறிக்கை வெளியிட்டுள்ள போனிகபூர் ‘மே 1ம் தேதி அஜித்தின் 50வது பிறந்தநாளில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட திட்டமிட்டிருந்தோம். ஆனால், கொரோனா பரவல் மிகவும் அதிகமாக இருப்பதால் அந்நாளில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை  வெளியிட முடியாத நிலையில் இருக்கிறோம். தினமும் லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பலரும் தங்களின் குடும்ப உறுப்பினர்களை இழந்து துக்கத்தில் நேரத்தில் வலிமை அப்டேட்டை வெளியிட முடியாமல் இருக்கிறோம்’ என அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Published by
adminram

Recent Posts