More

படம் முடியும் முன்னரே பெரிய தொகைக்கு விலைபோன வலிமை!

நேர்கொண்ட பார்வை படத்துக்குப் பின்னர் அஜித் – ஹெச்.வினோத் இரண்டாவது முறையாகக் கைகோர்த்திருக்கும் படம் வலிமை. படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். படத்தின் ஷூட்டிங் 90 சதவிகிதம் முடிந்திருக்கிறது. 

Advertising
Advertising

ஸ்பெயினில் ஆக்‌ஷன் சீக்வென்ஸை ஷூட் செய்வதற்காகப் படக்குழு வெயிட்டிங். அந்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் ஷூட்டிங் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  இந்தநிலையில், படத்தின் ஷூட்டிங் முடிவதற்கு முன்பாகவே வலிமையின் தமிழ்நாடு தியேட்டர் வெளியீட்டு உரிமை ஒரு பெரிய தொகைக்குக் கைமாறியிருக்கிறது.

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து படத்தின் தமிழ்நாடு தியேட்டரிக்கல் ரைட்ஸை பெரிய தொகைக்குக் கைப்பற்றியிருக்கிறார்கள். இதுபற்றி தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அஜித்தின் 50வது பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியிடப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

Published by
adminram

Recent Posts