Categories: latest news

கோட் படத்தில் அஜித்தும் ஒரு கேமியோ ரோலில் வரப் போகிறாரா?.. திடீரென நடந்த அந்த சிறப்பான சந்திப்பு!..

நடிகர் விஜயை வைத்து கோட் படத்தை இயக்கி வரும் வெங்கட் பிரபு திடீரென அஜித்தை சந்தித்து உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். பல வருடங்கள் கழித்து அஜித் மற்றும் வெங்கட் பிரபுவின் சந்திப்பு நிகழ்ந்திருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

அஜித் ரசிகர்களுக்கு லைஃப் டைம் செட்டில்மெண்ட் படமாக மங்காத்தா திரைப்படம் தான் இன்னமும் உள்ளது. அந்த படத்திற்கு பிறகு மங்காத்தா 2 படத்தில் அஜித் மற்றும் விஜய் இணைந்து நடிக்க வேண்டும் என ரசிகர்கள் ரொம்பவே ஆவலாக எதிர்பார்த்தனர். ஆனால் அதன் பின்னர் அஜித் வெங்கட் பிரபுவுக்கு கால்ஷீட் கொடுக்கவே இல்லை.

மங்காத்தா படத்தின் படப்பிடிப்பின் போது அஜித் மற்றும் விஜய் வெங்கட் பிரபுவுடன் ஒன்றாக இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆகின. மங்காத்தா படத்தை தொடர்ந்து விஜயை வைத்து இயக்கும் வாய்ப்பு வெங்கட் பிரபுக்கு கிடைத்தது. ஆனால் பார்ட்டி ஒன்றில் எடுத்த புகைப்படத்தை விஜயின் அனுமதி இல்லாமல் வெங்கட் பிரபு வெளியிட்டதால் அந்த வாய்ப்பு அவரை விட்டு சென்றதாக சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டன.

மாநாடு படத்திற்கு பிறகு பழசை எல்லாம் மறந்த விஜய் வெங்கட் பிரபுக்கு கோட் படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். இந்த படத்தில் விஜயகாந்தை ஏஐ மூலமாக ஒரு முக்கிய காட்சியில் பிரபு நடிக்க வைத்துள்ளார்.

ஆனால், சமீபத்தில் பிரேமலதா விஜயகாந்தை யாரும் சினிமாவில் ஏஐ மூலமாக பயன்படுத்தக் கூடாது என சொல்லியிருக்கிறார். இந்நிலையில், கோட் படத்தில் அந்த ரோலில் அஜித் நடிப்பாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. அதற்கான சந்திப்பாக இது அமைந்திருக்குமோ? என்றும் அஜித் மற்றும் விஜய் ஒரு சீனில் திரையில் தோன்றினாலே போதும் தியேட்டர்கள் தெறிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கோட் படத்தில் இல்லையென்றால் கூட அடுத்து மங்காத்தா 2வை அஜித்தை வைத்து ஆரம்பித்து விடுங்கண்ணா என வெங்கட் பிரபுவிடம் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Saranya M

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

5 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

5 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

6 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

7 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

13 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

14 hours ago