தள்ளிபோகும் தளபதி 65 – காரணம் இதுதானாம்!…

Published on: May 28, 2021
---Advertisement---

84750d0b71e7f7e343c8d6c931ad25e4

விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ரஷ்யாவில் துவங்கியது. அதில் விஜய் சம்பந்தமான காட்சிகள் படமாக்கப்பட்டன. தொடர்ந்து முதல் அங்கு படமாக்கலாம் என்று படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். காரணம் இப்படத்தை எப்படியாவது தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்று சன்பிச்சர்ஸ் விரும்பியத்துதான். ஆனால் இந்த எண்ணத்தில் கொரொனா மண்ணை அள்ளி போட்டது.

9a803e5f6485e0b2fef78e0ff4e4d8b2

கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. தற்போது கொஞ்சம் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் விஜயை இயக்குனர் தொடர்பு கொண்டதாகவும்,ஆனால் விஜய் தரப்போ தற்போது கண்டிப்பாக படப்பிடிப்பிற்கு வர முடியாது என்றும், கொரோனா பரவல் குறைந்த பின்னரே படப்பிடிப்பில் கலந்துகொள்வதாக கூறியதாகவும் கோடம்பாக்கத்தில் பேசிகொள்கின்றனர்.

இதனால் தற்போதைக்கு விஜய் 65 படப்பிடிப்பு இல்லை என்று தெரிகிறது. எனவே இப்படம் தீபாவளிக்கு வெளியாவது கடினமே. அதனால் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதாவது தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.
 

Leave a Comment