படத்தின் பெயரைப் போலவே மோதிக்கொண்ட விஜய் ஆண்டனி, வைரமுத்து... என்ன படம்னு தெரியுதா?

by ராம் சுதன் |

டிஷ்யூம் படத்தில் வைரமுத்து எழுதிய அழகான காதல் பாடல் 'நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்' என்ற பாடலை எழுதினார்.

முதலில் விஜய் ஆண்டனி இந்தப் பாட்டை ஒத்துக்கவே இல்லையாம். ஏன்னா நெஞ்சாங்கூட்டில்னு ஒரு வார்த்தையை வைரமுத்து முதல்ல போட்டுருப்பாரு. அப்படின்னா என்னன்னு பலருக்கும் புரியாதுன்னு சொல்லி இருக்கிறார் விஜய் ஆண்டனி.

நெஞ்சாங்கூடுன்னா கிட்ட வந்துடுவாங்க. மார்பைத் தாங்கி நிக்க வைக்கிறதே அதுதான். நெஞ்சாங்கூடுன்னா தெரியாதா... எங்க ஊரு பக்கம் வந்து பாருங்கன்னு ஒவ்வொண்ணா சொல்லி சொல்லி விஜய் ஆண்டனியை வைரமுத்து சம்மதிக்க வைத்தாராம். அப்புறம் அரைகுறை மனசோடு சம்மதித்தாராம் விஜய் ஆண்டனி.

அதுக்குப் பிறகு தான் அரைகுறை மனசோடு இந்தப் பாட்டைப் பதிவு பண்ணினாராம். அப்படி இருந்தாலும் இந்தப் பாட்டு ரொம்பவே சூப்பர்ஹிட்டாச்சுங்கறது தான் விஷயமே. மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

பாடலின் உள்ளே உள்ள வரிகள் எல்லாமே பக்காவாக இருந்தன. முதல் சரணத்தில் விண்ணைத் துடைக்கின்ற முகிலை வெள்ளி நிலவை மஞ்சள் நட்சத்திரத்தை என்னை தேடி மண்ணில் வரவழைத்து உன்னைக் காதலிப்பதை உரைப்பேன் என்று வரிகள் போட்டு இருப்பார்.

அது மட்டுமல்லாமல் பாடலினுள் லட்சம் பல லட்சம் என்று தாய் மொழியில் சொல் இருக்க ஒத்த சொல்லு சிக்கவில்லை எதனாலே பந்தி வச்ச வீட்டுக்காரி பாத்திரத்தை கழுவிட்டு பட்டினியாய் கிடப்பாளே அதுபோலே என்று அழகான வரிகளை கவிப்பேரரசர் போட்டு இருப்பது அவரது அபார கற்பனைத் திறனைக் காட்டுகிறது.

அதாவது காதலியிடம் காதலை எப்படி சொல்வது என்றே தெரியவில்லையாம். இவ்வளவுக்கும் தமிழில் லட்சத்துக்கும் மேலான சொற்கள் உள்ளன. ஆனால் எனக்கு எதுவுமே சிக்கவில்லையே என காதலன் அவஸ்தைப் படுகிறான். என்ன ஒரு அழகான கவிநயம் என்று பாருங்கள்.

2006ல் சசியின் இயக்கத்தில் வெளியான படம் டிஷ்யும். ஜீவா, சந்தியா, நாசர், மாளவிகா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைத்துள்ளார். பூமிக்கு வெளிச்சம், டைலாமோ, கிட்ட நெருங்கி, நெஞ்சாங்கூட்டில், பூ மீது உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றி வாகை சூடியது.

Next Story