'தளபதி 64’ படத்தின் உரிமையை பெற்ற விஜய் பட தயாரிப்பாளர்!

1291541fe2b9d20b3da360d63f15f0c7

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவரும் தளபதி 64’படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரமும் ஏற்கனவே தொடங்கிவிட்டது என்பதை பார்த்தோம்

ஏற்கனவே தளபதி 64’படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவியும், டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனமும் மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் கேரள உரிமை ரூபாய் 6.8 கோடிக்கு விற்பனை ஆகி விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இந்த உரிமையை விஜய்யை வைத்து பல திரைப்படங்கள் தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்பி சவுத்ரி அவர்கள் பெற்றுள்ளதாகவும், கேரளா நிறுவனம் ஒன்றுடன் இணைந்து அவர் கேரளாவில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன

தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் விஜய்க்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதால் இந்த படம் கேரளாவில் நல்ல வசூலை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் முந்தைய படமான பிகில் திரைப்படம் கேரளாவில் மட்டும் 11 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்தப் படமும் அதே அளவு வசூல் செய்தால் ஆர்பி சவுத்ரி அவர்களுக்கு இருமடங்கு லாபம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

 

Related Articles

Next Story