More

அம்மாவுடன் தாஜ்மஹாலில் விஜய் – வைரலாகும் புகைப்படம்!


தளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். கல்லூரி பேராசிரியாக நடிக்கும் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். கொரோனா ஊரடங்கினாள் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்று 2020 பொங்கல் தினத்தன்று வெளியாகும் என கூறப்படுகிறது.

உலகம் முழுக்க உள்ள ஏராளமான சினிமா ரசிகர்களின் பேவரைட் நடிகரான விஜய்யை பற்றி ஏதேனும் சிறிய விஷயம் கசிந்தால் கூட அன்றைக்கு அது செய்தியாக பேசப்படும். அந்தவகையில் தற்ப்போது இதுவரை வெளிவராத விஜய்யின் அரிய புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

Advertising
Advertising

விஜய் சிறுவயதில் தன் அம்மாவுடன் தாஜ் மஹால் முன்பு நின்று எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியாகி பரவி வருகிறது. இதுவரை வெளிவராத இந்த அரிய புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர்.

Published by
adminram

Recent Posts