More

இது புதுசு!… ஜார்ஜியாவில் ஷூட்டிங் ஸ்பாட்டில் தளபதி விஜய்… லீக் ஆன போட்டோ!….

மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா நாட்டில் துவங்கியுள்ளது. 23 நாட்கள் அங்கு படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. தளபதி 65 என அழைக்கப்படும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.  இப்படத்தை சன் பிக்சரஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

Advertising
Advertising

தற்போது உலகம் முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. எனவே, திட்டமிட்டதை விட விரைவாக படப்பிடிப்பை முடித்துவிட படக்குழு முடிவு செய்துள்ளது. ஜார்ஜியாவில் படப்பிடிப்பு முடிந்ததும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. 

ஏற்கனவே ஜார்ஜியாவில் இயக்குனர் நெல்சனும், விஜயும் நின்று கொண்டு பேசிக்கொண்டிருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகியது.

இந்நிலையில், ஜார்ஜியாவில் கையில் ஒரு பேப்பரை வைத்துக்கொண்டு விஜய் படித்துக்கொண்டிருக்கும் புகைப்படம் தற்போது படப்பிடிப்புட் தளத்திலிருந்து லீக் ஆகியுள்ளது.

 

Published by
adminram

Recent Posts