விஜய் படத்தைப் பார்க்கத் தயங்கிய பெண்கள் கூட்டம்… அப்புறம் ஹிட்டான கதை தெரியுமா?

தளபதி விஜய் ஆரம்பத்தில் படங்களில் நடிக்கும் போது ‘உங்கள் விஜய்’ ஆக ஜொலித்தார். அப்போது அவர் சொந்தக் குரலில் பாடல் பாடி டான்ஸ் ஆடுவார். அந்தப் பாடல் திரையில் ஓடும்போது இந்தப் பாடலைப் பாடிக் கொண்டு இருப்பவர் உங்கள் விஜய் என எழுத்துக்கள் தோன்றும்.

ஆரம்ப காலகட்டத்தில் விஜயின் படங்கள் என்றாலே கவர்ச்சி விருந்தாகத் தான் இருக்கும். அதனால் பெரும்பாலும் பேமிலி ஆடியன்ஸ் படம் பார்க்க வர மாட்டார்கள். அந்தக் குறையைப் போக்கும் வகையில் வந்தது தான் இந்தப் படம். இதுபற்றி பிரபல இயக்குனர் ராஜகுமாரன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா…

விஜய் இன்னைக்கு 100 கோடி சம்பளம் வாங்குறவரா இருக்கலாம். ஆனா விஜயை குடும்பப்பாங்கான ரசிகர்களையும் ரசித்துப் பார்க்க வைத்த படம் விக்ரமன் இயக்கிய பூவே உனக்காக தான். அதுல எந்த சந்தேகமும் தேவையில்லை.

விக்ரமன் சார் அமைச்ச அந்தப் பாதை வழியாகத் தான் அவர் நடந்து போயி தான் அவ்ளோ பெரிய ஆளா ஆயிருக்காருங்கறது தான் உண்மை. பூவே உனக்காக படம் வருவதற்கு முன்பே விஜய்க்கு 100 நாள்கள் ஓடிய படங்கள் நிறைய இருக்கு. அவரது முதல் படமே 100 நாள் ஓடிய படம் தான்.

அவருக்கு ரசிகர்கள் வட்டாரம் நிறைய இருக்கு. ஆனா பேமிலி ஆடியன்ஸ் வர மாட்டாங்க. உதாரணத்துக்கு பூவே உனக்காக படம் சென்னை கமலா தியேட்டர்ல ஓடுச்சு. ரெண்டு மூணு வாரம் லேடீஸே வரல. ஒன்லி பாய்ஸ் தான். அதுவே எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. படம் ஹவுஸ்புல்லா போகுது. ஆனா பேமிலி ஆடியன்ஸ் அவ்வளவா வரல.

அப்போ தினத்தந்தி நாளிதழ்ல வர்ற விமர்சனம் பெரிசா பேசப்படும். அதுல தான் காதலுக்கு இன்னொரு தேசிய கீதம்னு போட்டாங்க. அப்புறம் தான் அந்தப் படம் 275 நாள் ஓடுச்சு. தேவயாணி கூட ஒரு இன்டர்வியுல சொன்னாங்க. அப்போ விக்ரமனோட அசிஸ்டண்ட் ரவிசங்கர் போயிருக்காரு.

அப்போ இந்தப் பக்கத்து தியேட்டர்ல ஓடிக்கிட்டு இருக்குதே படம். அந்தப் படத்தோட டைரக்டர் விக்ரமன் தான் என்னைக் கதை சொல்ல அனுப்பினாருன்னு தேவயாணிகிட்ட சொன்னாராம். அந்தப் படம் அவ்ளோ பெரிய ஹிட்டுன்னதும் தான் அந்தக் கதையை நான் கேட்டேன் என்று தேவயாணி சொன்னாராம். அது எந்தப் படம்னு கேட்குறீங்களா? அது தான் சூர்யவம்சம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விக்ரமனிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் தான் ராஜகுமாரன். அதன்பிறகு ‘நீ வருவாய் என’ படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. படம் பெரிய அளவில் ஹிட் அடித்து அவருக்குப் பெயர் சேர்த்தது. இவர் நடிகை தேவயாணியைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ராம் சுதன்

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

6 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

7 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

8 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

9 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

15 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

16 hours ago