More

வில்லேஜ் கதைக்கு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல போட்டோஷூட்.. ஐய்யோ பாவம் தயாரிப்பாளர்!….

வெற்றிமாறான் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கவிருந்தார். ஆனால், சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக அப்படத்திலிருந்து விலகி விட்டார். அதன்பின்னர், அந்த வேடத்தில் நடிகர் கிஷோர் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியானது.

Advertising
Advertising

ஆனால், தற்போது அந்த வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளாராம். இதற்கான போட்டோஷூட் சமீபத்தில் சென்னையில் நடந்துள்ளது. அதுவும் சென்னையில் உள்ள ஒரு பிரபல ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடந்துள்ளது. ஒரு பக்கா கிராம கதையின் பின்னணியை கொண்ட படத்திற்கு எதற்கு நட்சத்திர ஹோட்டலில் போட்டோஷூட் என்பது தெரியவில்லை.

ஏற்கனவே, வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த வட சென்னை படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் விஜய் சேதுபதி விலக அந்த வேடத்தில் அமீர் நடித்திருந்தார். சில வருடங்கள் கழித்து தற்போது விஜய் சேதுபதியும், வெற்றிமாறனும் இணையும் நேரம் வந்துள்ளது.

ஆனால், இப்படம் சூரி படமாக வருமா இல்லை விஜய் சேதுபதி படமாக வருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…

Published by
adminram

Recent Posts