More
Categories: Cinema News latest news

இசையா? வரிகளா? எது பெரியது? வைரமுத்து – இளையராஜா சொல்வது என்ன? அனிருத் திருந்துவாரா?..

தற்போது இளையராஜா தனது பாடல்களுக்கு காப்புரிமை தொடர்ந்த வழக்கு பற்றி பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், இசை பெரியதா, மொழி பெரியதா? என்ற பட்டிமன்றத்தை கவிப்பேரரசர் வைரமுத்து தொடங்கி வைத்துள்ளார்.

அந்தக் காப்புரிமை வழக்கில் இசை அமைப்பாளர் படைப்பாளி என்றால் பாடலை எழுதும் பாடலாசிரியரும் படைப்பாளி என்ற கணக்கில் தான் வருவாங்க என நீதிபதிகள் கேட்டதில் இருந்து இந்த விவாதம் தொடர்ந்து கொண்டுள்ளது. வைரமுத்து இசையும், மொழியும் சேர்ந்து என்கிறார். ஆனால் தீர்ப்பு மொழி பக்கம் உள்ளது. ஆதியில் இசை தான். அதன் பிறகு தான் மொழி. வரி வடிவம்.

Advertising
Advertising

ஆனால் இவற்றில் எது பெரியது என்றால் கோழியில் இருந்து முட்டை வந்ததா, முட்டையில் இருந்து கோழி வந்ததா என்ற கதை தான். இதற்கு யாரும் இதுவரை தீர்ப்பு சொல்லவே இல்லை. இன்னைக்கு இருக்கிற இசை, விஞ்ஞானம் தான் இசையைத் தக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. இதற்கு முன்னாடி 2000 வருஷத்திற்கு முன் உள்ள திருக்குறள், தொல்காப்பியம் எல்லாம் கிடைக்கிறது.

இதையும் படிங்க… அட்லீக்கெல்லாம் அண்ணன் இவர்தான்!.. சுந்தர் சியை பக்கத்திலேயே வச்சு பங்கமா கலாய்த்த பிரசாந்த்!..

ஆனால் அப்போதுள்ள இசையை நாம் கண்டுபிடிக்க முடியவில்லை. அவற்றையும் மொழியில் இருந்து தான் கண்டுபிடிக்க முடிகிறது. சிலப்பதிகாரத்தில் இசையைப் பற்றியும், நடனத்தையும் பற்றிய குறிப்புகளையும் பார்க்க முடிகிறது.

எழுத்து, சிலை, ஓவியத்தைத் தவிர மற்ற எல்லாமே மாயகலைகள் தான். அந்த நேரத்தில் தான் பார்க்க முடியுமே தவிர மற்ற நேரங்களில் பார்க்க முடியாது.

அவற்றில் ஒன்று தான் இசை. அதை ஒரு தடவை கேட்டால் அது காதுக்குள்ளேயே இருக்காது. மறுபடியும் கேட்டால் தான் ரசிக்க முடியும். அந்தக் காலத்தில் இருந்து இசையைப் பற்றிக் கூற மொழி தேவைப்படுகிறது. அந்த வகையில் இசையும், மொழியும் என இரண்டுமே பெரியதுதான் என்கிறார் வைரமுத்து.

பட்டுக்கோட்டையார் பாடல்கள் முழுக்க முழுக்க எழுத்தாக நிற்கிறது. வைரமுத்து பாடல்கள் இசையால் நிற்கிறது. கண்ணதாசன் பாடல்களில் மொழி வலுவாக நிற்கிறது. ஆனால் ரெண்டுமே வலுவாக இருந்தால் அது சகாப்தம் படைக்கும்.

மொழியா, இசையா எது பெரிது என்ற சண்டை தேவையில்லை. மொழி மண்ணின் பண்பாடு, நாகரிகத்தைச் சொல்லக்கூடியது. இசையிலும் பண்பாடு உள்ளது. ஆனால் அது பொதுவானது. இந்த விவாதம் நல்லது தான். இளையராஜாவின் பாடல்கள் கண்டிப்பாகப் புரியும்.

இதையும் படிங்க… த்ரிஷா நடிச்சு கண்டுக்கல.. அசால்ட்டா நடிச்சு பேர் வாங்கிய நயன்! என்ன மேட்டர் தெரியுமா?

ஆனால் அனிருத் போன்ற இசை அமைப்பாளர்கள் மொழியைப் பின்னுக்குத் தள்ளுகிறார்கள். இந்தக் காலகட்டத்தில் வைரமுத்து இந்த விவாதத்தை வைத்துள்ளது ஆரோக்கியமான விஷயம். அந்த வகையில் அனிருத் போன்ற இசை அமைப்பாளர்கள் திருந்தினால் தமிழுக்கு நல்லது. இல்லை என்றால் காலம் அவர்களைத் தள்ளிவிடும்.

மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

Published by
sankaran v

Recent Posts