More

கால்மேல் கால்போட்டு செம கெத்தாக சத்ரியன் படம் பார்த்த கேப்டன்

தமிழ் சினிமாவில் 80, 90 காலகட்டங்களில் முன்னணி நடிகராக வளம்வந்தவர் விஜயகாந்த். ரசிகர்கள் இவரை செல்லமாக புரட்சிக் கலைஞர் என அழைத்தனர். இவரை நிறத்தை வைத்து, இவரெல்லாம் எங்கே ஹீரோவாக ஜெயிக்க போகிறார் என கூறியவர்கள் மத்தியில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து ஜெயித்து காட்டினார்.

Advertising
Advertising

கடைசியாக ஹீரோவாக இவர் 2010ல் வெளியான ‘விருதகிரி’ படத்தில் நடித்திருந்தார். இது இவரது 150 வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அவரது உறவினர் சுதீஷ் தயாரித்திருந்த இந்தப்படத்தை அவரே இயக்கியும் இருந்தார்.

vijayakanth

இவர் நடிகர் சங்க தலைவராக (கேப்டனாக) இருந்தபோது பல பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளார். இவர் கேப்டனாக இருந்த காரணத்தால் ரசிகர்கள் இவரை செல்லமாக கேப்டன் என அழைக்க ஆரம்பித்தனர். 2005 முதலே முழுநேர அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வந்த அவர் அதன்பின் படங்களில் நடிப்பதை குறைத்தார். கடைசியாக இவர் 2015ல் சாகாப்தம் படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்திருந்தார். அரசியலில், இரண்டுமுறை (2006, 2011) சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். 

2016ல் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர் 2011 – 2016 வரை தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளாக உடல்நலக் குறைபாட்டால் அரசியலில் முழு ஈடுபாடு இல்லாமல் இருக்கிறார். 

சமீபத்தில் அவரது பிறந்தநாளின்போது, அறுவைச்சிகிச்சை செய்வதற்காக விரைவில் வெளிநாடு செல்லவுள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அதேபோல் சிலநாட்களுக்கு முன்னதாக தனது மகனுடன் துபாய் சென்றார். தொண்டையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக சென்ற அவர், தான் தற்போது நலமுடன் உள்ளதாக டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

vijayakanth

அத்துடன் ஒரு புகைப்படத்தை பகிர்ந்த அவர், எனக்கு சிகிச்சையின்போது உதவிய செவிலிய சகோதரிகளுடன் நான் நடித்த சத்ரியன் படத்தை பார்த்தபோது எடுத்த புகைப்படம் இது என தெரிவித்துள்ளார். இந்தப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Published by
adminram

Recent Posts