More

தளபதி 66… லோகேஷிடம் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் கண்டிஷன்!

விஜய் – விஜய் சேதுபதி கூட்டணியில் வெளியான மாஸ்டர் படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது. கொரோனாவுக்குப் பிந்தைய சூழலில் ஃபேமிலி ஆடியன்ஸை மீண்டும் தியேட்டருக்கு அழைத்து வந்ததில் மாஸ்டர் கோலிவுட்டுக்கு மிகப்பெரிய பங்காற்றியது. 

இதற்கு அடுத்தபடியாக நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் நடக்கிறது. இந்தநிலையில், விஜய் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தளபதி 66 என்று அழைக்கப்படும் அந்தப் படத்தில் விஜய் மீண்டும் மாஸ்டர் இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால், மாஸ்டரில் விஜய்யை விட விஜய் சேதுபதி பெயர் வாங்கியதைப் போல் இந்தப் படத்தில் நடந்துவிடக் கூடாது என விஜய் கறார் காட்டுகிறாராம்.

தளபதி 66ல் விக்ரம் வில்லனாகலாம் என்று பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், விஜய் மாஸ்டர் அனுபவத்தால் ரொம்பவே யோசிக்கிறாராம். `நம்ம படத்தில் வில்லனாக நடிப்பவர் இதற்கு முன்னர் ஹீரோவாக நடித்திருக்கக் கூடாது’ என லோகேஷ் கனகராஜிடம் ஸ்டிரிக்டாகவே விஜய் தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறதாம். இதனால், லோகேஷ் வேறு வில்லனைத் தேடுவார் என்று சொல்கிறார்கள். 
 

Published by
adminram

Recent Posts