More

விஜய்யுடன் தளபதி 65-ல் மோதப்போவது இவரா… மாஸ் அப்டேட்

மாஸ்டர் பெருவெற்றியைத் தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான வேலைகளை விஜய் உடனே தொடங்கிவிட்டார். ஒரு படம் முடிந்த பிறகே அடுத்த படத்துக்கான வேலைகளைத் தொடங்குவதை வழக்கமாக வைத்திருந்த விஜய், கொரோனாவால் மாஸ்டர் ரிலீஸ் ஏறக்குறைய ஒரு வருடம் தள்ளிப் போனதைக் கருத்தில் கொண்டு உடனடியாக அடுத்த படத்தைத் தொடங்கியிருக்கிறார். 

தளபதி 65 எனப் பெயரிடப்பட்டிருக்கும் அந்தப் படத்தை `கோலமாவு கோகிலா’, `டாக்டர்’ படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்கிறது. படத்தின் அறிவிப்பே டீசர் வகையில் பிரமாண்டமாக வெளியாகி வரவேற்பைப் பெற்றது. படத்தின் போட்டோஷூட் வேலைகளை விஜய் சமீபத்தில் முடித்துக் கொடுத்திருக்கிறார். 

ஹீரோயினாக பூஜா ஹெக்டே அல்லது ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரில் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்படலாம் என்கிறார்கள். ப்ரி புரடக்‌ஷன் வேலைகள் வேகமெடுத்திருக்கும் நிலையில் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களையும் இறுதி செய்யும் பணியில் தயாரிப்பு மற்றும் இயக்குனர் தரப்பு பிஸியாகியிருக்கிறது. அந்த வகையில் விஜய்க்கு வில்லனாக நடிக்க `பேட்ட’ படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த நவாஸுதீன் சித்திக்கியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறதாம். அவர் இந்தப் படத்தில் நடிக்க அதிக வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது. விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். 
 

Published by
adminram