பெஃப்சிக்கு கோடிகளை நன்கொடையாக கொடுத்த மக்கள் செல்வன்.. உடனே சங்கம் எடுத்த முடிவு

by ராம் சுதன் |

தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமல்ல தெலுங்கு ஹிந்தி என பிற மொழிகளிலும் தனக்கான ஒரு தனி அங்கீகாரத்தை பெற்று திகழும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். ஹீரோவாக மட்டும் இல்லாமல் தனக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து அதன் மூலம் மக்களின் அபிமானங்களை பெற்ற நடிகராகவும் இருந்து வருகிறார் விஜய் சேதுபதி.

இதனாலேயே மக்கள் செல்வன் என்ற அடைமொழியோடு இன்றுவரை வலம் வந்து கொண்டிருக்கின்றார். ரசிகர்களுடன் எளிதாக பழகுவதிலும் சகஜமாக பேசுவதிலும் ஒரு அண்ணனாக மகனாக எதார்த்தமாக பழகும் நடிகராக இருக்கிறார் .எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்ப தன்னை மெருகேற்றிக் கொள்வதில் இவருக்கு இணை இவர்தான். இந்த நிலையில் பெஃப்சி தொழிலாளர்களுக்கு விஜய் சேதுபதி 1.30 கோடி நன்கொடையாக கொடுத்திருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது.

பெஃப்சி தொழிலாளர்களுக்காக வீடுகள் கட்டுவதற்கு நன்கொடையாக 1.30 கோடி நன்கொடையாக அவர் கொடுத்திருக்கிறாராம். இதன் மூலம் முதலில் கட்டப்படும் ஆறு அப்பார்ட்மெண்டுகளுக்கு விஜய் சேதுபதி டவர் என்று பெயர் வைக்கப்படும் என பெப்சி தொழிலாளர் சங்க தலைவர் ஆர் கே செல்வமணி அறிவித்திருக்கிறார். அவர்களுடைய ஒரே கோரிக்கை இங்குள்ள பெப்சி தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும்.

எந்தெந்த ஊர்களில் படப்பிடிப்பு நடக்கிறதோ அங்கு பெப்சி தொழிலாளர்களைத் தான் பணியமர்த்த வேண்டும் என்பதுதான் நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி விஜய் அஜித் கமல் போன்றவர்களின் படங்கள் ஹைதராபாத்திலோ அல்லது வெளிநாட்டிலோ படப்பிடிப்பை நடத்தினால் அந்தந்த நாடுகளில் அந்தந்த மாநிலங்களில் இருக்கும் தொழிலாளர்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

இதனால் பெஃப்சி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இது முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்பதுதான் இவர்களுக்கு நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. இதனால் அவர்களின் வேலை வாய்ப்பு குறைந்து வருகிறது. ஆனால் ஒரு சில நடிகர்கள் இவர்களின் நலனுக்காக நன்கொடையாக பல லட்சம் தொகையை கொடுத்து வரும் நிலையில் இன்று விஜய் சேதுபதி 1.30 கோடியை நன்கொடையாக கொடுத்திருக்கிறார். இது சினிமா வட்டாரத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

Next Story