விஜய்க்கு வாழ்த்துக்கள்!.. அஜித்தையும் கூப்பிட போறோம்!.. விஷால் கொடுத்த பேட்டி!...

by ராம் சுதன் |
விஜய்க்கு வாழ்த்துக்கள்!.. அஜித்தையும் கூப்பிட போறோம்!.. விஷால் கொடுத்த பேட்டி!...
X

மதகஜராஜா வெற்றி: மதகஜராஜா வெற்றி விஷாலுக்கு ஒரு புதிய தெம்பை கொடுத்திருக்கிறது. மதகஜராஜா இசை வெளியீட்டின் போது அவர் வந்த விதம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. கை நடுக்கத்துடன் மிகவும் சோர்ந்து இனிமே விஷாலின் கெரியர் அவ்வளவுதான் என்றுதான் அனைவரும் நினைத்தனர். ஆனால் அடுத்த இரண்டாவது நாளே ஆளே மாறி பக்கா ஸ்டைலுடன் படத்தை பார்க்க திரையரங்கிற்கு வந்து மேலும் ஷாக் கொடுத்தார் விஷால்.

லைம் லைட்டில் விஷால்: அதற்கேற்ப அந்தப் படமும் பெரிய ப்ளாக் பஸ்டர் ஹிட்டானது. அதனால் மீண்டும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் விஷால். இனிமேல் படங்களில் நடிக்க கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். சமீபகாலமாக மீடியாக்கள் முன்பும் பல விஷயங்களை பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். சொல்லப்போனால் லைம் லைட்டில் இருக்கும் நடிகராக இப்போது திகழ்ந்து வருகிறார் விஷால்.

வில்லனாக பார்த்தார்கள்: ஏற்கனவே பணம் இருந்தாலும் படம் எடுக்க வராதீர்கள். அதுவும் சின்ன பட்ஜெட் படங்கள் என்று எடுக்க வராதீர்கள் என்ற கருத்தை சொல்லி அனைவருக்கும் ஒரு வில்லனாக காணப்பட்டார் விஷால். மீண்டும் அதே மாதிரியான கருத்தை தற்போதும் பேசியிருக்கிறார். 1 கோடியோ அல்லது 4 கோடியோ இருந்தாலும் தயவு செய்து படம் எடுக்க வேண்டும் என்று வராதீர்கள்.

தயவு செய்து வேண்டாம்: இது போன்று ஏற்கனவே பேசி வில்லனாக என்னை பார்த்தனர். ஆனாலும் திரும்பவும் அதைத்தான் சொல்கிறேன். சினிமா இண்டஸ்ட்ரி மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அந்த பணத்தை உங்கள் பசங்க பெயரில் டெப்பாசிட் செய்து வையுங்கள் அல்லது ஏதாவது சொத்தை வாங்கிப் போடுங்கள். ஏன் விஜய் மல்லையா அல்லது அம்பானி போன்றோர்கள் படம் எடுப்பதில்லை. அவர்களுக்கு சினிமாவை பற்றி நன்றாக தெரியும். அதனால்தான் அவர்கள் படம் எடுக்கவில்லை என்று கூறியிருக்கிறார்.

மேலும் விஜய் அஜித் பற்றியும் பேசியிருந்தார் விஷால். அதாவது விஜய் சார் இப்போது படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்திற்கு வாழ்த்துக்கள். அவருடைய படத்தில் ஏதோ இருக்கிறது என்று நினைக்கிறேன். பத்மபூஷன் விருது பெற்ற அஜித்திற்கு வாழ்த்துக்கள். நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா வரும் போது நடிகர் அஜித்துக்கு நேரில் அழைப்பு விடுக்கப்படும். நேரில் வரமாட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

தனிப்பட்ட உரிமையை நாங்கள் மதிக்கிறோம் என விஷால் கூறினார். சங்க கட்டிடம் முடிந்து திறப்பு விழாவும் முடிந்த பிறகுதான் தன்னுடைய திருமண அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் ஏற்கனவே விஷால் அறிவித்திருந்த நிலையில் கூடிய சீக்கிரம் அது சம்பந்தமான அறிவிப்பும் வெளியாகும் என்று தெரிகிறது.

Next Story