சூர்யாவுக்கு வில்லனா நடிக்கணும்னு ஆசை.. அதுதான் பவர்ஃபுல்.. சொன்னது யாருனு தெரியுமா?

தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சூர்யா. சினிமா ஒரு பக்கம். தனது அறக்கட்டளையின் மூலம் மாணவர்களுக்கு நல்ல ஒரு தரமான கல்வியையும் வழங்கி வருகிறார். சொசைட்டியில் அவருக்கு என ஒரு தனி மரியாதை இருந்து வருகிறது. சமீபத்தில்தான் தான் நடத்தி வரும் அகரம் அறக்கட்டளையின் புதிய கிளை அலுவலகம் ஒன்றை திறந்து வைத்தார் சூர்யா.
அதற்கு சினிமாவில் இருந்து பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் அவருடைய ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். அப்போது அந்த அகரம் அறக்கட்டளையில் படிக்கும் மாணவர்கள் வெவ்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்திருந்தவர்களை உற்சாகப்படுத்தினர். சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் கங்குவா.
அந்த படம் எதிர்பார்த்த அளவு சரியாக போகவில்லை. பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட அந்தப் படம் பல கோடி நஷ்டம் அடைந்தது. அதன் பிறகு ஆர்.ஜே பாலாஜி இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கும் ரெட்ரோ படத்திலும் நடித்து முடித்துள்ளார். இப்படி வரிசையாக அடுத்தடுத்து படங்கள் ரிலீஸ் ஆகும் நிலையில் இருக்கின்றன.
ஹீரோவாக நடித்து மக்களிடம் வரவேற்பை பெற்றதை விட வில்லனாக விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்து பெரும் புகழ் அடைந்தார் சூர்யா. அந்தப் படத்தில் கொடுமையான வில்லனாக காணப்பட்டார். வந்தது ஒரு சில நிமிடங்கள் தான் என்றாலும் அவருடைய கதாபாத்திரம் பெரிய அளவில் மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது .
இந்த நிலையில் சூர்யாவை வைத்து லோகேஷ் கனகராஜ் ரோலக்ஸ் என்று தனியாக ஒரு படத்தை எடுக்க இருக்கிறார். இந்த நிலையில் சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது என ஒரு நடிகர் கூறி இருக்கிறார். அவர் வேறு யாருமில்லை தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு.
அதாவது தமிழில் ரஜினி, கமல் இருந்தாலும் சூர்யாவுடன் நேருக்கு நேராக இருந்து நடிக்க வேண்டும். அது பவர்ஃபுல்லாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். இவர் ரஜினிக்கு நெருக்கமான நண்பரும் நடிகருமான மோகன் பாபுவின் மகன் ஆவார். நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார் விஷ்ணு மஞ்சு.