More

ஆர்ட்டிகிள் படத்தின் தமிழ் ரீமேக் கைவிடப்பட்டதா? உதயநிதியின் திடீர் முடிவு!

நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்க இருந்த ஆர்ட்டிகிள் 15 படத்தின் ரீமேக் கைவிடப்பட்டதாக வதந்திகள் பரவியுள்ளன.

Advertising
Advertising

இந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்த படமாக அமைந்தது ஆயுஷ்மான் குர்ரானா நடித்த ஆர்ட்டிகிள் 15 திரைப்படம். போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் இந்த படத்தின் ரீமேக் படம் தமிழில் உருவாக இருந்தது. இந்த படத்தை இயக்குனர்  கனா படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜா இயக்க இருந்தார். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே இந்த படம் ரிலீஸ ஆகும் என சொல்லப்பட்டது. இதை வைத்து உதயநிதியின் அரசியல் இமேஜை ஏற்றலாம் என எண்ணியதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது திடீரென உதயநிதி ஸ்டாலின் மகிழ் திருமேனி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இதனால் ஆர்ட்டிகிள் 15 ரீமேக் கைவிடப்பட்டதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அது உண்மை இல்லை என சொல்லப்படுகிறது. மகிழ் திருமேனி படத்தில் நடித்த பின் அந்த படத்தில் உதய் நடிப்பார் என சொல்லப்படுகிறது.

Published by
adminram

Recent Posts