More

ரஜினியின் பெற்றோர் பிறப்பிடம் எது?.. சான்றிதழை வெளியிடுவாரா?….

இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ‘இந்த சட்டத்தால் (CAA) இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எந்த ஆபத்தும் இருக்காது என்றும் ஒருவேளை அப்படி ஆபத்து ஏற்பட்டால் நான்தான் முதலில் குரல் கொடுப்பேன் என்றும் கூறினார். அதேபோல் என்ஆர்சி என்பது மிகவும் அவசியமானது என்றும் இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் தான் வெளிநாட்டினர் எத்தனை பேர் இந்தியாவில் இருக்கின்றார்கள் என்பது தெரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் கட்சிகள் தவறான கருத்துகளை பரப்பி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்.

ரஜினியின் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஜினி அடிப்படை விஷயங்கள் தெரியாமல் பேசுகிறார் என பல அரசியல் தலைவர்களும், நெட்டிசன்களும் கூறி  வருகின்றனர்.

இந்நிலையில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ள கருத்தில் ‘ ரஜினி சொல்வது முற்றிலும் தவறு. CAA, NRC, NRP அனைத்தையும் ஒன்றாகத்தான் பார்க்க வேண்டும். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நடக்கக்கூடிய போராட்டத்தை மாணவர்கள்தான் முன்னெடுக்கிறார்கள். எந்த அரசியல் கட்சியும் முன்னெடுக்கவில்லை. மாணவர்களின் கடுமையான எதிர்ப்பை தணிப்பதற்காக பாஜகவின்  முகவராக இருக்கக்கூடிய ரஜினிகாந்த்தை மத்திய அரசு பயன்படுத்தி இருக்கிறது .

Advertising
Advertising

தேவையில்லாமல் மதகுருக்கள் பற்றி பேசும் ரஜினியின் வாயடைக்க வேண்டும். பாஜகவிற்காக ரஜினி இந்தளவிற்கு தரம் தாழ்ந்து பேசுவது மோசமானது. ரஜினிகாந்திற்கு நான் பகிரங்கமாக சவால் விடுகிறேன், ரஜினிகாந்தின் பெற்றோர் பிறப்பிடம் எது அதற்கான சான்றிதழை ரஜினி வெளியிடுவாரா? எனவும் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.

Published by
adminram

Recent Posts