அந்தகன் படத்தோட ஸ்பெஷலே அதுதானாம்... அப்பாவைப் பற்றி அப்படி சொன்ன பிரசாந்த்

by ராம் சுதன் |

தந்தை தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்துள்ள படம் அந்தகன். ரசிகர்கள் படம் ரிலீஸ்க்காக ஆவலோடு காத்திருக்காங்க. படத்துல நிறைய ஸ்பெஷல் இருந்தாலும் அதுபற்றி டாப்ஸ்டாரே என்ன சொல்றாருன்னு பார்க்கலாம்.

தமிழக ஆடியன்ஸ் ஸ்மார்ட்டானவங்க. அதனால தான் அந்தாதூண் படத்தைத் தமிழ்ல ரீமேக் பண்றோம். திரைக்கதையை ரசிகர்கள் ரொம்பவே ரசிக்கும் விதத்தில் இருக்கும்.

அந்தகன் படத்துல ஒரு ஒரு கேரக்டருக்குமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருக்கும். ஏதோ வந்தான், போனான்னு இருக்காது. ஒவ்வொரு காட்சியிலும் அந்தக் கேரக்டர் வர்ற சீன்களில் அற்புதமாக அதுக்கான லிங்க் அமைந்து இருக்கும். அதை அழகா அந்தக் கேரக்டருக்காக ஜோடிச்சிருப்பாங்க. அதைப் பார்க்கும்போது நீங்க பாராட்டுற மாதிரி இருக்கும்.

டைரக்டர் சார் பத்தி ஒரே ஒரு வார்த்தையில சொல்லணும்னா தரமான இயக்குனர். பழைய காலத்து டெக்னாலஜி, அவரோட அனுபங்கள், இன்னைக்கு உள்ள ஆடியன்ஸ்களுக்குப் பிடித்த விஷயங்கள்னு எல்லாவற்றையும் கலந்து இந்தப் படத்தை அழகா கோர்வையா எடுத்துருக்காங்க.

படத்துல ஜாஸ்தியா அலப்பறை இருக்காது. நடிகர்களிடம் இருந்து எப்படி நடிப்பை வாங்கணும் என்பதை அழகா பண்ணியிருக்கிறார் டைரக்டர் தியாகராஜன்.

ரொம்ப கஷ்டமான காட்சிகளை எப்படி எடுக்கப் போறோம்னு யோசிக்கும் போது அதை வந்து தியாகராஜன் சார் ரொம்ப ஸ்டைலிஷா அழகா எடுத்திருப்பார். ஒவ்வொரு காட்சியையும் தெளிவான எண்ணத்தோடு மற்றவங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் வகையிலும் எடுத்துருக்காங்க. இது இந்தப் படம் மட்டுமல்ல.

அஞ்சாறு படத்துக்கு அவரு கூட ஒர்க் பண்ணியிருக்கேன். எல்லாத்துலயும் அதைத்தான் பார்த்திருக்கேன். 28 நாள்களில் படம் முழுவதையும் எடுத்து முடித்துள்ளார். ரொம்ப கஷ்டப்பட்டு எடுக்கல. பாடல்களும் சேர்த்து இந்த 28 நாள்களுக்குள் ஸ்மார்ட்டா எடுத்து முடித்துவிட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்துள்ள படம் அந்தகன். சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, ஊர்வசின்னு பெரிய நட்சத்தரிரப் பட்டாளம். ஆனா இவ்வளவு நடிகர்களும் போடணுமேன்னு போடலையாம். கதைக்குள்ள அவர்கள் பொருந்தி வர்ற காட்சி பார்க்க சூப்பராக இருக்குமாம். படம் வரும் 9ம் தேதி வெளியாகிறது. அது வரை பொறுத்திருப்போம்.

Next Story