'தலைவர் 168’ படத்தில் சூரி-கீர்த்திசுரேஷ் உறவுமுறை என்ன?

4008ea17b5fc4154d53e7263b0c735ac-1

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் ’தலைவர் 168’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, சூரி உள்பட பலர் கலந்து கொண்டு நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நேற்று முதல் இந்த படப்பிடிப்பில் நடிகை கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டார் என்பதும் தேசிய விருது பெற்ற அவருக்கு படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்து கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர் என்பதும், ரஜினிகாந்த் கீர்த்தி சுரேஷுக்கு கேக் ஊட்டிவிட்டார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகர் சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் ’தேசிய விருது பெற்ற அன்பு தங்கச்சி கீர்த்தி சுரேஷுக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு அண்ணனாக சூரி நடித்திருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சூரி மற்றும் கீர்த்தி சுரேஷ் அண்ணன் தங்கைகள் என்றால் இருவரும் ரஜினிகாந்தின் பிள்ளைகளாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.

கீர்த்தி சுரேஷ்க்கு வாழ்த்து தெரிவித்து சூரி போட்ட ஒரே ஒரு ட்வீட் மூலம் நெட்டிசன்கள் தங்கள் கற்பனை குதிரைகளை பறக்கவிடுவது ஒரு பக்கம் பரபரப்பை ஏற்படுத்தினாலும் உண்மையிலேயே சூரி-கீர்த்தி சுரேஷ் அண்ணன் தங்கையாக நடிக்கின்றார்களா என்பது போகப்போக தெரிந்துவிடும்

 

Related Articles

Next Story