">
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
என்ன கதை எடுக்குறது? ஐடியா கேட்ட திரௌபதி இயக்குனர்… கலாய்த்த நெட்டிசன்கள்
பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் இயக்குனர் ஜீ.மோகன் இயக்கத்தில் நடிகர் அஜித்தின் மைத்துனர் ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் திரௌபதி. இத்திரைப்படம், ஒரு குறிப்பிட்ட சாதியின் பெருமையை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டதால் அப்பிரிவின் ஆதரவும், மற்றவர்கள் இப்படத்தை கடுமையாகவும் எதிர்த்தனர்.
இந்நிலையில், இயக்குனர் மோகன் ‘சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் சொல்லப்படாத பல கதைகள், களங்கள், உண்மை சம்பவங்கள் வெளிவர தொடங்கி உள்ளது. இந்த சூழ்நிலையில் நீங்கள் எத்தகைய கதைகளை எதிர்பார்த்து காத்து உள்ளீர்கள் என்பதை எனக்கும் பல இயக்குனர்களுக்கும் புரியும் படி உங்கள் விருப்பங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்..’ என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதைத் தொடந்து நெட்டிசன்கள் அவரை கிண்டலடிக்க துவங்கி விட்டனர். மோகன் பாமகவின் ஆதரவாளர் என்பதால், பாமகவிற்கு எதிரான பல கருத்துகளை கூறி அதுபற்றி படம் எடுங்கள் என பலரும் அவரிடம் கூறி வருகின்றனர். ஒரு பக்கம் பாமகவிற்கு ஆதரவாக சிலர் இறங்க அவர்களிடையே மோதல் எழுந்துள்ளது.
வெறும் 2 % ரேட்டிங் கொண்ட ஒரு படத்தை எடுத்துட்டு பெரிய சாதனை செய்த மாத்ரி மற்ற இயக்குனர்களுக்கு ஐடியா , அறிவுரை , கலந்தாய்வுன்னு வரார் நம்ம தல
— Yousuf Riaz (@YousufRiaz1) April 13, 2020